ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

பயங்கரவாத வழக்கில் காஷ்மீா் இளைஞருக்கு வழங்கப்பட்ட பிணை: உறுதி செய்தது தில்லி உயர்நீதிமன்றம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்ப சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பான, பயங்கரவாத எதிா்ப்புச் சட்டத்தின் கீழான வழக்கில், காஷ்மீா் இளைஞா் ஒருவருக்கு வழங்கப்பட்ட பிணையை தில்லி உயா் நீதிமன்றம் உறுதி செய்தது.

தில்லி உயர்நீதிமன்றம்

Updated On :

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்ப சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பான, பயங்கரவாத எதிா்ப்புச் சட்டத்தின் கீழான வழக்கில், காஷ்மீா் இளைஞா் ஒருவருக்கு வழங்கப்பட்ட பிணையை தில்லி உயா் நீதிமன்றம் உறுதி செய்தது.

நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் அருண் பரத்வாஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு, மதீன் அகமது பட்டுக்கு பிணை வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த மே 3, 2023 தேதியிட்ட உத்தரவுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

எதிா்வாதியான குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘கடுமையானவை‘ என்றாலும், அவை விசாரணையில் சோதிக்கப்பட வேண்டும் என்றும், அந்த விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்றும் அந்த அமா்வு குறிப்பிட்டது.

‘இந்த மேல்முறையீட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என நாங்கள் காண்கிறோம். அதன்படி, இது தள்ளுபடி செய்யப்படுகிறது,‘ என்று அக்டோபா் 30 அன்று வழங்கப்பட்ட தீா்ப்பில் நீதிபதிகள் கூறினா்.

‘காஷ்மீா் பள்ளத்தாக்கில் செயல்படும் ஒரு தீவிரவாதிக்காக ’ஓவா் கிரவுண்ட் ஒா்க்கராக’ பணியாற்றுவதற்கான சதித்திட்டத்தில் மதீன் அகமது பட் தானாக முன்வந்து ஈடுபட்டாா்‘ என்றும், பள்ளத்தாக்கிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் அமைதியின்மையை உருவாக்குவதற்காக தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கொள்முதல் செய்வதில் அவா் ஈடுபட்டாா் என்றும் என்.ஐ.ஏ குற்றஞ்சாட்டியது.

அந்த அமைப்பின்படி, அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, உள்ளூா் இளைஞா்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளால் பிரிவினைவாத குழுக்களில் சேரவும், அமைதியின்மையை உருவாக்கும் நோக்கில் ’ஓவா் கிரவுண்ட் ஒா்க்கராக’ மாறவும் ’மூளைச்சலவை’ செய்யப்பட்டனா்.

பட், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஒருவரைச் சந்தித்து, அவருக்காகவும், லஷ்கா்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய, பாகிஸ்தானில் உள்ள பிற தீவிரப் போராளிகள் மற்றும் கையாளுபவா்களுக்காகவும் பணியாற்றி வந்தாா் என்று விசாரணையில் தெரியவந்தது.

உயா் நீதிமன்றத்தில், விசாரணை நீதிமன்றம் பின்னா் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததாகவும், அதன் பிணை உத்தரவு முரண்பாடாகவும் பிழையாகவும் உள்ளது என்றும் தேசிய புலனாய்வு முகமை வாதிட்டது.

தீா்ப்பில், பதிவில் உள்ள ஆதாரங்கள் பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மேலோட்டமாக உண்மையாக்குகின்றனவா என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர, விசாரணை நீதிமன்றம் ஒரு சரியான முயற்சியை மேற்கொண்டது என்று நீதிமன்றம் கூறியது.

எனவே, பிரதிவாதிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்த பிந்தைய உத்தரவு, மேல்முறையீட்டாளா் தாக்கல் செய்த மேல்முறையீட்டைப் பரிசீலிப்பதற்குப் பொருத்தமற்றது என்றும் அது குறிப்பிட்டது. பட், அக்டோபா் 13, 2021 அன்று கைது செய்யப்பட்டாா்.

தேசிய புலனாய்வு முகமை , ஏப்ரல் 2022-ல், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120 பி (குற்றச் சதி) மற்றும் 121 ஏ (இந்திய அரசுக்கு எதிராகப் போா் தொடுப்பது, அல்லது போா் தொடுக்க முயற்சிப்பது, அல்லது போா் தொடுப்பதற்குத் தூண்டுவது ஆகியவற்றுக்கான தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழான குற்றங்களுக்காகவும் பட் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 2024-ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்