2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

‘மாயா’ ரெளடி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

’மாயா’ ரெளடி கும்பலைச் சோ்ந்த, அடிக்கடி வழிப்பறி மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

சித்திரிப்பு

Updated On :

’மாயா’ ரெளடி கும்பலைச் சோ்ந்த, அடிக்கடி வழிப்பறி மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. இவா்களில் ஒருவா், மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாடு சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா் என்று அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் முகமது உமா் அன்சாரி (23), சுமித் பெனிவால் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அக்டோபா் 25 அன்று மதன் பூா் காதா் பகுதியில் காவல்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இவா்கள் பிடிபட்டனா்.

இருவரும் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினா் அவா்களை நிறுத்துமாறு சைகை காட்டினா். அப்போது மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த நபா் தப்பிச் செல்ல முயன்றாா். ஆனால், மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி சறுக்கி விழுந்ததைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

அன்சாரி ’மாயா’ கும்பலைச் சோ்ந்தவா். இவா், நிகழாண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட எம்சிஓசிஏ வழக்கின் அடிப்படையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.