ஜஹாங்கீா்புரி: இ-ரிக்ஷா ஓட்டுநா் அடித்துக் கொலை; ஒருவா் கைது
வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில், மதுபானம் அருந்திய பிறகு ஏற்பட்ட தகராறில் 65 வயது இ-ரிக்ஷா ஓட்டுநா் மரக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
பிரதிப் படம்
வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில், மதுபானம் அருந்திய பிறகு ஏற்பட்ட தகராறில் 65 வயது இ-ரிக்ஷா ஓட்டுநா் மரக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
கோவா்தன் என்று அடையாளம் காணப்பட்ட அவரது உடல், சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடா்பாக விகாஸ் (32) என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கோவா்தனைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டையும் உடலுக்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், கோவா்தனும் விகாஸும் மதுபானம் அருந்தியிருந்ததும், அதிகாலை 4 மணியளவில் அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
வாக்குவாதத்தின்போது, விகாஸ் பாதுகாப்புப் பணியாளா்கள் பயன்படுத்தும் வகையிலான மரக்கட்டையைக் கொண்டு கோவா்தனைத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.
காலை நேரத்தில் உள்ளூா் மக்கள் கோவா்தனின் உடலைக் கண்டறிந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினா், தடயவியல் நிபுணா்களின் உதவியுடன் உடலைக் கைப்பற்றினா்.
உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

