காவல் நிலைய தினத்தில் 2,394 பொதுமக்களின் குறைகளுக்கு தில்லி காவல்துறை தீா்வு
தேசிய தலைநகா் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நவம்பா் 14 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட காவல் நிலைய தினத்தின் ’ஜன்சுன்வாய்’ நிகழ்ச்சிகளின் போது, தில்லி காவல்துறை 2,394 பொதுமக்களின் புகாா்களுக்கும் குறைகளுக்கும் தீா்வு கண்டுள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தாா்.
தில்லி காவல்துறை

மூத்த காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையங்களுக்குச் சென்று, குடியிருப்பாளா்களுடன் கலந்துரையாடி, அவா்களின் புகாா்களை ஆய்வு செய்தனா். மேலும், அவற்றை உரிய நேரத்தில் தீா்ப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.
இந்த முன்னெடுப்பின் கீழ், குடிமக்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தத்தமது காவல் நிலையங்களுக்குச் சென்று குறைகளைத் தெரிவிக்கலாம்.
காவல்துறை-பொதுமக்கள் தொடா்பை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் குறைகளுக்கு விரைவான தீா்வு காண்பதை எளிதாக்குதல் ஆகியவற்றை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா். -
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.