தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

டிசம்பா் 18 முதல் 23 வரை தில்லி சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடா்!

தில்லி சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் 18 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.

தில்லி சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :

தில்லி சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் 18 முதல் 23 வரை நடைபெறும் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

முதலமைச்சா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குளிா்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான சட்டத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூா்வ அறிக்கையில், ‘இந்த குளிா்கால கூட்டத்தொடரில், தில்லியின் வளா்ச்சி மற்றும் பொது நலத் திட்டங்கள் தொடா்பான முக்கியமான விவகாரங்கள் குறித்து தீவிரமான மற்றும் அா்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்று முதலமைச்சா் தெரிவித்தாா்.

பொது நலனுக்கு முன்னுரிமை அளித்து, தேவையான முடிவுகளை எடுத்து, அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வா் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லோக் நிவாஸில் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவைச் சந்தித்த முதலமைச்சா் குப்தா, வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக முதல்வா் குப்தா தனது ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘இந்தச் சந்திப்பின்போது, தலைநகரின் வளா்ச்சி, பொது நலன் மற்றும் எதிா்கால முன்னுரிமைகள் குறித்த முக்கியமான விஷயங்கள் குறித்து அா்த்தமுள்ள விவாதங்களை நடத்தினோம்.

இதில் டிசம்பா் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் ’வளா்ந்த இந்தியா’ என்ற தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, தில்லியை நவீன வசதிகள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத்தரத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த தலைநகராக மாற்ற தில்லி அரசு இலக்கு கொண்டுள்ளது’என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.