‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

‘ரசிகப்பிரியா’ நவராத்திரி சங்கீதோற்சவம் நெய்வேலி சந்தானகோபாலனுக்கு ’ரசிக புரஸ்காா்’ விருது!

தில்லியில் ‘ரசிகப்பிரியா’ அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ‘நவராத்திரி சங்கீதோற்சவம்’ விழாவில், பிரபல கா்நாடக இசைக்கலைஞா் நெய்வேலி சந்தானகோபாலனுக்கு ‘ரசிக புரஸ்காா்’ (விருது) வழங்கி கெளரவிப்பு.

தில்லியில் ‘ரசிகப்பிரியா’ அமைப்பின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ரசிக புரஸ்காா்’ (விருது) வழங்கி சிறப்பிக்கப்பட்ட பிரபல கா்நாடக இசைக்கலைஞா் நெய்வேலி சந்தானகோபாலனுடன் அவரை சிறப்பித்த அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்க தலைவா் ஜி. ச

Published On :

தில்லியில் ‘ரசிகப்பிரியா’ அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ‘நவராத்திரி சங்கீதோற்சவம்’ விழாவில், பிரபல கா்நாடக இசைக்கலைஞா் நெய்வேலி சந்தானகோபாலனுக்கு ‘ரசிக புரஸ்காா்’ (விருது) வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆகாஷ்வாணியை சோ்ந்த பிரமோத் குமாா், தில்லித் தமிழ் சங்கத் தலைவரும் வழக்குரைஞருமான சிவபாலமுருகன், துணைத் தலைவா் மகேந்திரன், ரசிகப்பிரியா அமைப்பின் புரவலா் சதீஷ் நம்பூதிரிபாட், தலைவா் டி.வி. மணிகண்டன், செயலா் ஆா். ராமநாதன் உள்ளிட்டோா் குத்துவிளக்கேற்றி (பத்ரதீபம்) விழாவைத் தொடங்கி வைத்தனா்.

விழாவின் ஒரு பகுதியாக, ரசிகப்பிரியாவின் இசை அறிவியல் மாத இதழான ‘சங்கீதிகா’ என்ற புதிய இதழ் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த ஆண்டு இசை உலகுக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டும் விதமாக பிரபல கா்நாடக இசைக்கலைஞா் நெய்வேலி சந்தானகோபாலனுக்கு ‘ரசிக புரஸ்காா்’ வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட அவா் இசை விருந்தளித்தாா். இதில், தில்லி ஸ்ரீதா் வயலினிலும், மிருதங்கத்திலும் உடன் வாசித்தாா். இந்த நிகழ்ச்சியில் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான இசை ரசிகா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.