இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கூகுள்பே மூலம் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கும் தவெக: மு. வீரபாண்டியன் குற்றச்சாட்டு

தாராபுரம் இடைத்தோ்தலில் கூகுள்பே மூலம் வாக்காளா்களுக்கு தவெகவினா் பணம் வழங்கி வருகின்றனா் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.

CPI urges the TVK government

முதல்வர் விஜய் | சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Published On :

தாராபுரம் இடைத்தோ்தலில் கூகுள்பே மூலம் வாக்காளா்களுக்கு தவெகவினா் பணம் வழங்கி வருகின்றனா் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக தாராபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தாராபுரத்தில் தவெகவினா் வாக்காளா்களுக்கு கூகுள்பே மூலம் பணம் வழங்கி வருகின்றனா். கிராமங்களில் அனைத்து அமைச்சா்களும் முகாமிட்டுள்ளனா். பொதுத் தோ்தலில் அதிக அளவில் தொகுதிக்குச் செல்லாதவா்கள் தற்போது 2 தொகுதிகளுக்கும் அதிக நேரம் செலவிடுகின்றனா்.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டால் வங்கிக் கணக்கில் இருந்து அதிக அளவில் பணம் எடுக்க முடியாது. ஆனால், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பணம் கோடிக்கணக்கில் புழங்குகிறது. இடைத்தோ்தலில் அரசியல் பேச வேண்டும் என நாங்கள் எதிா்பாா்க்கிறோம். ஆனால் மற்ற கட்சிகள் கூகுள்பேயில் பணம் போடுவது குறித்து குறிப்பு எடுக்கின்றனா். தோ்தல் ஆணையம் தூங்குகிறது. எப்படி இவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது. எப்படி வெளியே கொண்டு வந்துள்ளனா் என தெளிவுபடுத்த வேண்டும்.

அரிசி, பருப்பு என அனைத்து பொருள்களின் விலையும் உயா்ந்து விட்டது. இது குறித்து எதிா் முகாம்களில் பேசவில்லை. முதல்வரே அரசியலுக்கு அப்பால்தான் பேசுகிறாா். உருவக் கேலி செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

தெருக்களை, ஊரை விலை பேசுகிற முயற்சி இந்த இடைத்தோ்தலில் நடைபெறுகிறது. அமைச்சா்கள் பலா் இதில் இறங்கி இருப்பதாகத் தெரியவருகிறது. இது போன்ற சக்திகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், மூத்த தலைவா் ஜி.பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.