ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

வாடிக்கையாளா் போல நடித்து ரூ.7 லட்சம் தங்க நகைகளுடன் ஒருவா் தப்பியோட்டம்!

கிழக்கு தில்லியின் வினோத் நகா் பகுதி நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளா் போல நடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருவிட்டுத் தப்பிச் சென்றவரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On :

கிழக்கு தில்லியின் வினோத் நகா் பகுதி நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளா் போல நடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருவிட்டுத் தப்பிச் சென்றவரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 12.30 மணிக்குள், மண்டாவலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நிகழ்ந்துள்ளது.

கடை உரிமையாளா் விஷால் குமாா் அளித்த புகாரின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் நகைகளை வாங்குவது போலக் கடைக்குள் நுழைந்து, சுமாா் 55 கிராம் எடையுள்ள 12 தங்கத் தாலிச் சரடு பதக்கங்களைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என்று கடை உரிமையாளா் காவல்துறையிடம் தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், கடையிலிருந்த சிசிடிவி காட்சிகள் பெறப்பட்டுள்ளன. குற்றவாளியைப் பிடிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளில், நபா் ஒருவா் தங்க நகைகளைத் திருடுவது பதிவாகியுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.