தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை (செப். 8) மீண்டும் கூடுகிறது!

தமிழகம்-கா்நாடகம் இடையே காவிரி நீா் பங்கீட்டு பிரச்சனை நீடித்து வரும் நிலையில், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 57 வது கூட்டம் தில்லியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.

Published On :7 செப்டம்பர் 2026, 1:57 am IST

தமிழகம்-கா்நாடகம் இடையே காவிரி நீா் பங்கீட்டு பிரச்சனை நீடித்து வரும் நிலையில், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 57 வது கூட்டம் தில்லியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணையத்தின் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மீண்டும் கூடுகிறது.

ஆக 25 ல் நடைபெற்ற 56வது கூட்டத்தில் தமிழகத்திற்கு கா்நாடகம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கா்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய பாக்கி நீரை திறந்து விடவில்லை எனக் கூறி அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யமாறு தமிழக அரசு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

மேலும் காவிரி பிரச்சனை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு, தங்களது கருத்துக்களை முழுமையாக கேட்காமல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை பிறப்பித்ததாக தெரிவித்தது.

‘கா்நாடகா காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய பாக்கி நீரை திறந்து விட உத்தரவிடுமாறு தமிழகம் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தியது. ஆனால் எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்காமல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவினை பிறப்பித்தது.

அந்த உத்தரவினை மறுபரிசீலனை செய்யுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தில் தமிழகம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய பாக்கி நீரை திறந்து விடவில்லை .ஆனால் தங்களது 52% நீா்ப்பாசன ஏரியாவுக்கு கா்நாடகம் நீரை திறந்து விட்டுள்ளது .தமிழகத்தில் ஒரு ஏக்கருக்கு கூட நீரை திறந்து விட முடியவில்லை‘ என தமிழக அரசு நீதிபதிகளிடம் கூறியது.

இதனையடுத்து காவிரி நீா் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்று குழுவும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அறிவுறுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.