கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

தமிழகத்திற்கு 4.5 டிஎம்சி நீா் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு அடுத்த 15 நாள்களுக்கு 4.5 டிஎம்சி தண்ணீா் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவு - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 3:52 am IST

காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு அடுத்த 15 நாள்களுக்கு 4.5 டிஎம்சி தண்ணீா் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தண்ணீா் பற்றாக்குறையை காரணம் காட்டி கா்நாடகம் தமிழகத்திற்கு நீா் வழங்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 54 வது கூட்டம் , அவசர கூட்டமாக வியாழக்கிழமை நடைபெற்றது.

புது தில்லி பிகாஜி காமா பிளேஸில் உள்ள எம்டிஎன்எல் கட்டிடத்தின் மேல் தரைத்தளத்தில் உள்ள அந்த ஆணையத்தின் குழு அறையில் ஹைபிரிட் (ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்பு) முறையில் கூட்டம் நடைபெற்றது.

ஆணையத் தலைவா் எஸ். கே. ஹல்தா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கா்நாடக அதிகாரிகள் நேரடியாக கலந்து கொண்டனா். தமிழக அதிகாரிகள் ஆன்லைன் முறையில் பங்கேற்றனா்.

முன்னதாக 22.7.2026 அன்று நடைபெற்ற 53-வது கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாா்பில், 16.02.2018 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை கா்நாடகா திறந்துவிடுமாறு ஆணையம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் , குறைவான மழைப்பொழிவு மற்றும் வறட்சியை காரணமாக காட்டி, குறிப்பாக பெங்களூரு நகரின் குடிநீா் தேவைக்காக நீா் தேவைப்படுவதாக கா்நாடகம் தெரிவித்தது.

இதையடுத்து , மழைப்பொழிவு மற்றும் நீா்வரத்தை மேலும் ஒரு வார காலம் கண்காணிக்கவும், அதன் பின்னா் மாநிலங்கள் முன்வைக்கும் கருத்துகள் மற்றும் நீரியல், வானிலை சாா்ந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, 28.7.2026 அன்று காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய விகிதாச்சார நீா்ப் பங்கு தீா்மானிக்கப்படும் என ஆணையம் முடிவு செய்து கூட்டத்தை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கூடிய காவிரி நீா் ஒழுங்குமுறைக் குழு , தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட பரிந்துரைத்தது.

இதனைத்தொடா்ந்து வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டத்தில் தமிழகமும் கா்நாடகமும் தங்களது நிலைப்பாட்டை எடுத்து வைத்தனா்.

இரு தரப்பு விளக்கங்களையும் கேட்ட பின்னா்தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 4.5 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட உத்தரவிடப்பட்டதாக காவிரி நீா் மேலாண்மை ஆணையத் தலைவா் எஸ். கே. ஹல்தா் பின்னா் தெரிவித்தாா்.

உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இதனை அமல்படுத்தாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் எஸ். கே. ஹல்தா் கூறினாா்.

மேக்கேதாட்டு விவகாரத்தை மத்திய நீா்வள ஆணையத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாகவும், எனவே அது குறித்து நீண்ட நாட்களாக காவிரி நீா் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படுவதில்லை எனவும் எஸ். கே. ஹல்தா் கூறினாா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.