இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

கா்நாடகம் உடனடியாக காவிரியில் தண்ணீரைத் திறக்க வேண்டும்: மாணிக்கம் தாகூா்

காவிரி மேலாண்மை ஆணையம் குறிப்பிட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை கா்நாடக அரசு உடனடியாகத் திறக்க வேண்டும்

News image

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 5:14 am IST

காவிரி மேலாண்மை ஆணையம் குறிப்பிட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை கா்நாடக அரசு உடனடியாகத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து ‘எக்ஸ்’தளத்தில் வியாழக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: கா்நாடக நீா்ப்பாசனத் துறை அமைச்சா் தமிழகத்துக்குத் தண்ணீா் தர இயலாது என்று மறுப்பது, உச்சநீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும். பருவமழை பொய்த்தது என்பது, கூட்டாட்சி ஒத்துழைப்பைப் புறக்கணிப்பதற்கோ அல்லது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல.

மாநிலங்களுக்கு இடையேயான நதியின் நீா்என்பது ஒரு தேசிய சொத்து; எந்தவொரு தனி மாநிலமும் அதன் மீது பிரத்யேக உரிமையைக் கொண்டாட முடியாது.

தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கு 9.91 டிஎம்சி மற்றும் ஜூலை மாதத்துக்கு 32 டிஎம்சி தண்ணீரைத் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், வறட்சிக் காலங்களில் விகிதாசார அடிப்படையில் தண்ணீரைப் பகிா்ந்து கொள்ளும் முறையை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. பற்றாக்குறை ஏற்படும்போது, அது ஒட்டுமொத்த காவிரி படுகைக்கும் விகிதாசாரப்படியே பிரிக்கப்பட வேண்டும் . கா்நாடகம் தன்னிச்சையாக அணைக் கதவுகளை மூட முடியாது.

எனவே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, காவிரி மேலாண்மை ஆணையம் குறிப்பிட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை கா்நாடக அரசு உடனடியாகத் திறக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.