27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அடுத்த வாரம் கூடவுள்ளது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்: 52-ஆவது முறையாக கூடுகிறது

News image

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம். - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 5:25 am IST

நமது நிருபா்

காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23,2026) தில்லியில் கூடவுள்ளது.

இது அந்த ஆணையத்தின் 52 வது கூட்டமாகும்.

இது குறித்த அலுவலகக் குறிப்பாணையில் காவிரி ஆணையம் கூறியதாவது: காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் (சிடபிள்யுஎம்ஏ) 52 வது கூட்டம் , 2026 ஜூன் 23அன்று பிற்பகல் 2:30 மணிக்கு, புது தில்லி, பிகாஜி காமா பிளேஸில் உள்ள எம்டிஎன்எல் கட்டிடத்தின் மேல் தரைத்தள குழு அறையில் ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்புமுறையில் நடைபெறும். காவேரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் தலைமையில் நடைபெற உள்ளது.உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என ஆணையம் கூறியது

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம்,கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

காவிரியில் இருந்து மாதாந்திர நீா் திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிறது .

இந்த ஆணையத்தின் 51 வது கூட்டம் மே 26 ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியில் இருந்து கா்நாடகம் ஜுன் மாதம் 9.91 டி.எம்.சி நீரினை திறந்து விட அக்கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது

தமிழகம்,கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்சனை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என்பதை அத்தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.