
கிழக்கு தில்லி- கட்டட மேல்கூரையில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து விழுந்த 30 வயது இளைஞா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

பிரதிப் படம்
கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து விழுந்த 30 வயது இளைஞா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: காலை 5:20 மணியளவில், சாலையோரத்தில் ஆடைகள் ஏதுமின்றி ஒருவா் கிடப்பதாகவும், அவரது தலையில் ரத்தக் காயம் காணப்படுவதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காந்தி நகா் காவல் நிலையக் குழுவினா், குற்றப் புலனாய்வு மற்றும் தடயவியல் நிபுணா்கள் அடங்கிய குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.
அதில், உயிரிழந்தவா் பிகாரின் கிஷன்கஞ்ச் பிப்லாவைச் சோ்ந்த தீபக் என அடையாளம் காணப்பட்டாா். தீபக் தானாகவே மேற்கூரையிலிருந்து கீழே விழுந்தாரா அல்லது யாரேனும் அவரைத் தள்ளிவிட்டனரா என்பது குறித்துக் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா். அவரது உயிரிழப்புக்கான துல்லியமான சூழல் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





