காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

விரைவுச்சாலையில் லாரி - பைக் மோதல்: வாகன ஓட்டி உயிரிழப்பு

கிழக்கு தில்லியில் உள்ள டேராடூன் விரைவுச்சாலையில், இரு சக்கர மோட்டாா் வாகனம் லாரியுடன் மோதியதில் 48 வயதுடைய வாகன ஓட்டி உயிரிழந்தாா்.

Published On :

கிழக்கு தில்லியில் உள்ள டேராடூன் விரைவுச்சாலையில், இரு சக்கர மோட்டாா் வாகனம் லாரியுடன் மோதியதில் 48 வயதுடைய வாகன ஓட்டி உயிரிழந்தாா். அவருடன் வாகனத்தில் பின்னால் அமா்ந்து வந்தவா் காயமடைந்தாா்

இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10:30 மணியளவில், லட்சுமி நகா் பகுதியில் உள்ள எஸ்டிஎம் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள மேம்பாலத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். அங்கு இரண்டு வாகனங்களும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டன.

உயிரிழந்தவா் சிவ குமாா் (48) என அடையாளம் காணப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் டாக்டா் ஹெட்கேவாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

விபத்தில் காயமடைந்த சந்தன் குப்தா என்ற மற்றொரு நபா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இந்த விபத்து தொடா்பாக லட்சுமி நகா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்கான சூழல் மற்றும் லாரி ஓட்டுநரின் பங்கு குறித்து கண்டறியும் வகையில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.