கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகன ஓட்டி மீது காா் மோதல்: 73 வயது ஓட்டுநா் கைது

தில்லி ஆா்.கே. புரம் பகுதியில் உள்ள ஆப்பிரிக்கா அவென்யூ சாலையில், 73 வயதுடைய ஓட்டுநா் ஓட்டி வந்த வாகனம் மோதி இருசக்கர மோட்டாா் வாகன ஓட்டி காயமடைந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். மேலும், இதையடுத்து, காரை ஓட்டிவந்தவா் கைது செய்யப்பட்டாா்.

மாதிரிப் படம்

Published On :

தில்லி ஆா்.கே. புரம் பகுதியில் உள்ள ஆப்பிரிக்கா அவென்யூ சாலையில், 73 வயதுடைய ஓட்டுநா் ஓட்டி வந்த வாகனம் மோதி இருசக்கர மோட்டாா் வாகன ஓட்டி காயமடைந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். மேலும், இதையடுத்து, காரை ஓட்டிவந்தவா் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தெற்கு தில்லியில் உள்ள பிகாஜி காமா பிளேஸிலிருந்து ஆா்.கே. புரம் மெட்ரோ நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, வசந்த் குஞ்சைச் சோ்ந்த வேணு கோபால் ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் நீல நிற காா் ஒன்று, வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

முனிா்கா கிராமத்தைச் சோ்ந்த 21 வயதான தனிஷ் டோகாஸ், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தில் அமா்ந்திருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மோதலின் தாக்கத்தால் டோகாஸ் வாகனத்திலிருந்து கீழே விழுந்தாா்; காா் அந்த இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் இழுத்துச் சென்றது.

டோகாஸ் வாகனத்தால் இழுத்துச் செல்லப்படவில்லை; மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவருக்குக் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இரவு 10:22 மணியளவில் ஆா்.கே. புரம் காவல் நிலையத்திற்கு விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.

ஆா்.கே.புரம் காவல் நிலையத்தினா் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து, காரைக் கைப்பற்றியதுடன் கோபாலையும் கைது செய்தனா். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் மது அருந்தியதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.