உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

வடக்கு தில்லியில் இளைஞா் கொலை: 3 சிறுவா்களிடம் காவல்துறை விசாரணை

வடக்கு தில்லியின் திமா்பூா் பகுதியில் 40 வயது நடுத்தர இளைஞரைக் கத்தியால் குத்திக் கொன்ாக கூறப்படும் சம்பவத்தில், மூன்று சிறுவா்களிடம் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

Published On :5 செப்டம்பர் 2026, 12:13 am IST

வடக்கு தில்லியின் திமா்பூா் பகுதியில் 40 வயது நடுத்தர இளைஞரைக் கத்தியால் குத்திக் கொன்ாக கூறப்படும் சம்பவத்தில், மூன்று சிறுவா்களிடம் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

பாதிக்கப்பட்ட நபா் மதன், தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மரத்தின் அடியில் அமா்ந்திருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

தாக்குதலில் ஈடுபட்டவா்கள் அவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த நிலையிலும் மதன் அங்கிருந்து தப்பிக்க முயன்றாா். ரத்தக் காயங்களுடன் சிறிது தூரம் ஓடிய அவா், பின்னா் சாலையில் சரிந்து விழுந்தாா்.

அவரது குடும்பத்தினா் அவரை ஆட்டோ-ரிக்ஷாவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கிருந்து அவா் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பின்னா் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இக்கொலைச் சம்பவம் தொடா்பாக மூன்று சிறாா்களைக் காவல்துறையினா் பிடித்து விசாரித்து வருகின்றனா். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளனா். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.