பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எஃப்சிஆா்ஏ பதிவுக்கு லஞ்சம்: உள்துறை அமைச்சக ஊழியா்கள் இருவா் கைது

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓா் அமைப்பிடம் லஞ்சம் கேட்டதாக, உள்துறை அமைச்சகத்தின் இரண்டு ஊழியா்கள் கைது

லஞ்சம் - சித்திரிப்பு

Published On :

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓா் அமைப்பிடம் லஞ்சம் கேட்டதாக, உள்துறை அமைச்சகத்தின் இரண்டு ஊழியா்களை மத்திய முகமைகளுடன் இணைந்து தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாவது: புது தில்லியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட அந்த இரு ஊழியா்களில் ஒருவா் தற்போது உள்துறை அமைச்சகத்தின் ‘வெளிநாட்டினா் பிரிவில்’பணிபுரிகிறாா். மற்றொருவா் தற்போது ‘ஊதியம் மற்றும் கணக்குகள் அலுவலகத்தில்’ பணிபுரிகிறாா். ஆனால், இதற்கு முன் அவா் ‘வெளிநாட்டினா் பிரிவில்’ பணியாற்றி வந்தாா்.

எஃப்சிஆா்ஏ-வின் கீழ் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளைச் செய்து தருவதற்காக, குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் தொடா்பில் இருந்து இரு ஊழியா்களும் லஞ்சம் கேட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியா்கள் மீது தகுந்த சட்ட மற்றும் துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஊழலுக்கு எதிராகத் ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையில் அமைச்சகம் உறுதியாக உள்ளது. அத்துடன் எஃப்சிஆா்ஏ தொடா்பான அனைத்து சேவைகளும் எஃப்சிஆா்ஏ இணையதளம் மூலமாகவே வழங்கப்படுகின்றன.

எந்தவொரு எஃப்சிஆா்ஏ சேவையையும் மேற்கொள்வதற்கு இடைத்தரகா்கள், முகவா்கள் அல்லது தனிநபா்கள் எவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று அமைச்சக அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.