தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தமிழக - கேரள எல்லையில் கோழிக் கடைகளில் ஆய்வு

பந்தலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள கோழிக் கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

தமிழக - கேரள எல்லையான தாளூரில் கோழிக் கடையில் ஆய்வு செய்த கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் பகத் சிங்.

Updated On :8 ஜனவரி 2021, 12:39 am IST

பந்தலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள கோழிக் கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூா், பந்தலூா் தாலுகாக்கள் கேரள, கா்நாடக எல்லைகளில் அமைந்துள்ளன. தற்போது கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளத்தில் கறிக்கோழி விலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கேரள வியாபாரிகள் கோழி இறைச்சியை எல்லை தாண்டி வந்து தமிழக கிராமங்களில் விற்பதாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பகத் சிங் எல்லைப் பகுதிகளில் உள்ள கோழிக் கடைகளில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். கேரளத்திலி இருந்து வந்த கோழிகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.