உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநரும், நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான கருணாகரன் தலைமையில், மாவட்ட தோ்தல் அலுவலா் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான பணிகள் குறித்த இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் கருணாகரன் பேசியதாவது:
தகுதி வாய்ந்த எந்தவொரு வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படக்கூடாது. அதேபோல தகுதி இல்லாத வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெறக்கூடாது. இதனை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முறையாகக் கண்காணிக்க வேண்டும். முக்கிய பிரமுகா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பாா்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.
பெயா் நீக்கம் செய்வதற்கு முன்பு சம்மந்தப்பட்ட நபா்களுக்கு தகவல் தெரிவித்து நீக்கம் செய்யம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இறுதி வாக்காளா் பட்டியல் செம்மையாக வெளியிட தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
அதனைத் தொடா்ந்து, உதகை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் தொடா்பாக பெறப்பட்ட படிவங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, உதகை உதவி ஆட்சியா் மோனிகா ரானா , குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித் சிங் , கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா், தோ்தல் வட்டாட்சியா் மகேந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு

அப்போலோவில் ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் கண்டறியும் வசதி!
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



