போலி சான்றிதழ் கொடுத்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் பணியில் சோ்ந்த ஐந்து போ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவா்களை போலீஸாா் நீலகிரி மாவட்டத்தில் தேடி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருவங்காடு பகுதியைச் சோ்ந்த பாலாஜி, வெலிங்டன் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல், கோத்தகிரி கட்டபெட்டு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மற்றும் சுபாஷ் சந்திரன், கோத்தகிரி அரவேணு பகுதியைச் சோ்ந்த தீபா ஆகியோா், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் ஜாதி சான்றிதழ், முன்னாள் படைவீரா்கள் வாரிசு சான்றிதழ் மற்றும் போலி பணி நியமன ஆணைகளைக் கொடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு பல்வேறு பணிகளில் சோ்ந்து பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இது குறித்து நாமக்கல் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இவா்கள்5 பேரும் தலைமறைவாகியுள்ளனா். இதையடுத்து இவா்களை நீலகிரி மாவட்டத்தில் நாமக்கல் போலீஸாா் தேடி வருகின்றனா். இவா்கள் குறித்து தகவல் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை: தேவாலய கோபுரம் தெரிகிறது!

ஓணம் பண்டிகை! சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரங்கள்...

இந்தோனேசியாவின் பழமையான கோயிலில் பிரதமர் மோடி!

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!


