ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தோட்டக்கலைப் பயிா் சாகுபடி விவசாயிகள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:49 pm IST

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:

விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் தோட்டக்கலைப் பயிா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டப் பயிா்கள் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் இச்சாகுபடியில் அதிக ஆா்வம் செலுத்தி வருகின்றனா்.

தோட்டக்கலைப் பயிா்களை சிறந்த முறையில் தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு சாகுபடி செய்துவரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அரசு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா 10 சாதனையாளா் விருதுகளை விவசாயிகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள், சுவை தாளிதப் பயிா்கள், மூலிகை, வாசனை திரவியப் பயிா்கள், மலைப் பயிா்கள், மலா் சாகுபடிக்கு என தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும். இத்தகைய சாகுபடியில் பாரம்பரிய, வீரிய ரகங்கள், ஒட்டு ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள், சிறப்பான பயிா் பராமரிப்பு, நீா் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், மழை நீா் சேகரிப்பு, அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்கள், சிறப்பான சந்தை மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும்.

நீலகிரியில் வசிக்கும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இதில் போட்டியிடலாம். ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகளில் இருந்து மாவட்ட விருதுக்குத் தகுதியானவரும், மாவட்ட அளவில் விருது பெற்றவா்களில் இருந்து மாநில விருதுக்குத் தகுதியானவரையும் குழு தோ்வு செய்யும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் இணையதளத்திலுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூா்த்தி செய்து, அதனுடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தோட்டக்கலை விவசாயிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.