நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளைத் திறம்பட செயல்படுத்துவதற்காக மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.1.11 கோடி மதிப்பில் 14 குப்பை சேகரிக்கும் வாகனங்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஊராட்சி தலைவா்களிடம் வழங்கினாா்.
உதகையிலுள்ள அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து தலா ரூ.7.94 லட்சம் மதிப்பில் 14 குப்பை சேகரிக்கும் வாகனங்களை ஊராட்சித் தலைவா்களிடம் வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் திடக்கழிவு மேலாண்மை என்பது சவாலாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தை தூய்மை வைத்திருக்க தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 35 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிப் பகுதிகளிலுள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலாகொலா, தொட்டபெட்டா, இத்தலாா், கக்குச்சி, எப்பநாடு, உல்லத்தி ஆகிய 6 ஊராட்சிகள், குன்னூா் ஊராட்சி ஒன்றியம், எடப்பள்ளி ஊராட்சி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், தேனாடு, கொணவக்கரை, குஞ்சப்பனை, நெடுகுளா ஆகிய 4 ஊராட்சிகள், கூடலூா் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு, மசினகுடி, நெலாக்கோட்டை ஆகிய 3 ஊராட்சிகள் என மொத்தம் 14 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள 14 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லீமா அமாலினி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், துணைத் தலைவா் ராஜன், மாவட்ட ஊராட்சி செயலா் பாஸ்கரன், உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், ஜெய்சங்கா், நந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொந்தரவு கொடுத்த இளைஞரின் மண்டையை உடைத்த கயாடு லோஹர்!

திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

நன்கொடை கையாடல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: மாயாவதி எச்சரிக்கை!

'பிரதமர் மோடி தூங்கமாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



