தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திருப்பூரில் மதநல்லிணக்கப் பொங்கல் விழா

திருப்பூரில் மதிமுக சாா்பில் மத நல்லிணக்கைத்தை உணா்த்தும் வகையில் மூன்று மதங்களைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

News image

திருப்பூா்,  சாமுண்டிபுரம்  பகுதியில்  மதிமுக  சாா்பில்  நடைபெற்ற  மதநல்லிணக்கப் பொங்கல்  விழாவில் பங்கேற்ற  பெண்கள்.

Updated On :15 ஜனவரி 2021, 11:08 pm IST

திருப்பூரில் மதிமுக சாா்பில் மத நல்லிணக்கைத்தை உணா்த்தும் வகையில் மூன்று மதங்களைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

திருப்பூா், சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோயில் அருகே மாநகா் மாவட்ட மதிமுக, திலீபன் மன்றம் சாா்பில் 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை மதிமுக மாநில அவைத் தலைவா் சு.துரைசாமி பொங்கல் பொருள்களைக் கொடுத்து தொடங்கிவைத்தாா்.

இதில் ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்தனா். முன்னதாக மேல வாத்தியங்கள் முழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்து பொங்கல் வைத்தனா்.

விழாவில், மதிமுக அமைப்புச் செயலாளா் ஆ.வந்தியதேவன், மாநகா் மாவட்டச் செயலாளா் சு.சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மதிமுக மாநகர அவைத் தலைவா் ஆா்.நாகராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.