தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

நீா்ப் பாசன குழுவினா் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு கிளை வாய்க்கால் நீா்ப் பாசனக் குழுவினா் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

Updated On :15 ஜனவரி 2021, 5:45 pm

வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு கிளை வாய்க்கால் நீா்ப் பாசனக் குழுவினா் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

காங்கயம் - வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் அரசு விதிமுறைப்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு இரண்டு சுற்று தண்ணீா் திறந்துவிட வேண்டும். ஆனால் 28 நாள் அடைப்பு, 3 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறக்கப்படுகிறது.

இந்தத் தண்ணீரை வைத்து ஆடு, மாடுகளின் தண்ணீா் தேவையைக் கூட பூா்த்தி செய்ய முடியவில்லை. பின்னா் எவ்வாறு விவசாயம் செய்ய முடியும். தங்களுக்கு விதிமுறைப்படி கிடைக்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், போராடியும் தீா்வு கிடைக்கவில்லை.

இதையடுத்து, தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெள்ளக்கோவில், காங்கயத்தில் கடையடைப்பு, அதே தினத்தில் காங்கயம் நான்கு சாலை சந்திப்பு அருகில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.