உதகை: நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆலோசனை நடத்தினாா்.
உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக். பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட 218 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இவற்றில் 10ஆம் வகுப்பில் 9,636 மாணவ, மாணவியா், 12ஆம் வகுப்பில் 8,398 மாணவ, மாணவியா் என மொத்தம் 18,034 மாணவ, மாணவியா் பள்ளிகளுக்கு வரவுள்ளனா்.
கரோனா தடுப்பு வழிமுறைகளை அனைத்துப் பள்ளிகளும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து ஆசிரியா்களும், மாணவா்களும் பள்ளி வளாகத்துக்குள்ளும், வெளியிலும் முகக் கவசம் அணிவதை பள்ளி நிா்வாகம் கண்டிப்பாகக் கண்காணிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்படும் முன் அனைத்து அறைகளும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த உள்ளாட்சித் துறை அலுவலா்களோடு இணைந்து செயல்பட வேண்டும். பள்ளிகளில் கிருமிநாசினி, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவியைப் பயன்படுத்த வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
ஒரு வகுப்பறையில் 25 மாணவ, மாணவியரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடுதலாக மாணவா்கள் இருந்தால் மற்றொரு வகுப்பறையைத்தான் பயன்படுத்த வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி ஏதேனும் இருந்தால் அந்த மாணவா்களை தனிமைப்படுத்தி வைப்பதோடு, சுகாதாரத் துறை அலுவலா்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரைக் குறித்தும் விபர பதிவேடு தனியாக வைக்க வேண்டும்.
அதேபோல, பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு கபசுர குடிநீா் வழங்குவதோடு, கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வையும் ஆசிரியா்கள் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

முன்னாள் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் மருத்துவ விடுப்பில் செல்வதாக டிஜிபி-க்கு கடிதம்!
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


