தன்னைத் தான் எதிர்கொள்ளல்
தன்னைத் தான் எதிர்கொள்ளல் - ஸர்ஸ்ரீ; பக்.344; ரூ.150; நர்மதா பதிப்பகம்,சென்னை. )044-24334397. நவீன வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் பலப் பிரச்னைகளுக்கு ஆத்ம தேடல் எனும் தீர்வை முன் வைக்கிறது இந


தன்னைத் தான் எதிர்கொள்ளல் - ஸர்ஸ்ரீ; பக்.344; ரூ.150; நர்மதா பதிப்பகம்,சென்னை. )044-24334397.
நவீன வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் பலப் பிரச்னைகளுக்கு ஆத்ம தேடல் எனும் தீர்வை முன் வைக்கிறது இந்த நூல். அமைதிக்கான தேடல், தொழில் சம்பந்தப்பட்ட தேடல், தெய்வீக நியாயத்தின் தேடல் என ஆத்ம தேடுதல் 8 வகையாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றையும் எப்படித் தேடுவது என்று ஹெர்குலிஸ் பாத்திரத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. மன அழுத்தங்களால் தற்கொலை, மதுவுக்கு அடிமையாவோர் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற நூல்கள் வெளிவருவது மிகவும் அவசியமானது. தி வாரியர்ஸ் மிர்ரர் என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமான இந்த நூலின் மொழிபெயர்ப்பை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். சில இடங்களில் மொழிபெயர்ப்பு சிறப்பாக இல்லாததால், சொல்லப்படும் கருத்துகளில் தெளிவின்மை நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...