புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஞானத்தின் நுழைவாயில்

ஞானத்தின் நுழைவாயில்: பிரம்ம சூத்திர விளக்க உரை: பி.எஸ்.ஆச்சார்யா; பக்.400; ரூ. 175; நர்மதா பதிப்பகம், சென்னை -17; )044-2433 6313. இந்திய தத்துவ ஞான நூல்களில் முக்கியமானது பிரம்ம சூத்திரம். வேதங்களை வ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:10 am

பி.எஸ்.ஆச்சார்யா

ஞானத்தின் நுழைவாயில்: பிரம்ம சூத்திர விளக்க உரை: பி.எஸ்.ஆச்சார்யா; பக்.400; ரூ. 175; நர்மதா பதிப்பகம், சென்னை -17; )044-2433 6313.

இந்திய தத்துவ ஞான நூல்களில் முக்கியமானது பிரம்ம சூத்திரம். வேதங்களை விளக்க வந்த உபநிடதங்களின் கருத்துச்செறிவே பிரம்ம சூத்திரமாக அமைந்துள்ளது. பல்வேறு உபநிடதங்களில் காணப்படும் முரண்பாடான கருத்துகளை விளக்கி ஒருங்கிணைக்கவே இந்நூல் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதராயணரால் கிமு. 2}ஆம் நூற்றாண்டில் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சூத்திர வடிவிலான இந்நூலுக்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் முதலான பெரியோர்கள் விளக்க உரை எழுதி உள்ளனர்.

இதில் சங்கரர் உரையை அடிப்படையாகக் கொண்டு, பி.எஸ்.ஆச்சார்யா எளிய தமிழில் எழுதியுள்ளார். பிரம்ம சூத்திரங்களின் சம்ஸ்கிருத வடிவம் அப்படியே தமிழில் அளிக்கப்பட்டுள்ளது.

பரம்பொருளான பிரம்மத்தை அறிவதே பிரம்ம சூத்திரத்தின் நோக்கம். வேதத்தின் இறுதிப் பகுதியாகக் கருதப்படுவதால், வேதாந்த சூத்திரம் என்ற பெயரும் இதற்குண்டு. இந்நூலின் 550 சூத்திரங்களும் பாமரர்களும் புரிந்துகொள்ளும் விதமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒப்பீட்டு நோக்கில், பகவத்கீதை, உபநிடதங்கள், சித்தர் பாடல்களிலிருந்து ஆங்காங்கே மேற்கோள்கள் காட்டப்பட்டிருப்பது சிறப்பு.

பிரபஞ்சத் தோற்றம், பிரம்மம், மனிதப்பிறவி, மரணம், இறப்புக்குப் பிந்தைய நிலை, முக்தி எனப் பல விஷயங்களை இந்நூல் அலசுகிறது. ஆன்மிக, தத்துவ நாட்டமுள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் இது; பரிசளிக்க ஏற்ற வகையில் நேர்த்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.