ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அதிகம் பயணிக்காத பாதை

அதிகம் பயணிக்காத பாதை - பிரதீப் சக்கரவர்த்தி; பக்.244; ரூ.210; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; )044 - 2813 2863. சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களின் சுருக்கம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:57 am

பிரதீப் சக்கரவர்த்தி

அதிகம் பயணிக்காத பாதை - பிரதீப் சக்கரவர்த்தி; பக்.244; ரூ.210; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; )044 - 2813 2863.

சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களின் சுருக்கமான வரலாறும் அந்நகரங்களைச் சுற்றி அமைந்துள்ள சில கோயில்களைப் பற்றியும் சுவையாக எழுதப்பட்ட தொகுப்பு நூல் இது.

சைவத் தலம், வைணவத் தலம், பாடல் பெற்றவை, மங்களாசாசனம் பெறாதவை என்று எந்தப் பாகுபாடுமின்றி தான் தேர்ந்தெடுத்த கோயில்களுக்கு நேரில் சென்று அந்த அனுபவங்களை அப்படியே எழுதியிருக்கிறார்.

இடையிடையே உபநிஷத்துகள், தேவாரம், திருவாய் மொழி, பெரும்பாணாற்றுப்படை என்று பல நூல்களிலிருந்தும் ஆசிரியர் எடுத்துக்காட்டும் மேற்கோள்கள் நூலை மேலும் கனமாக்குகிறது.

வேப்பத்தூர் (கும்பகோணம்) அமர்ந்த பெருமாள் கோயிலின் கட்டுமானப் பணியில் செங்கற்களையும் சுண்ணாம்புக் கலவையையும் இணைக்கும் சகடம் தேய்த்தல் என்கிற நுட்பமான முறை அந்தக் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பது, மன்னார் கோயில் (திருநெல்வேலி) கோயிலுக்கு ஒரு விதவைப் பெண்ணின் மூலம் கிடைத்த நிலத்தை அவளுடைய ஆண் உறவினர்கள் ஒத்துக் கொண்ட பின்புதான் கோயில் ஏற்றுக் கொண்டது என்று கல்வெட்டு மூலம் தெரிய வருவது போன்ற பல அரிய வியப்பூட்டும் தகவல்கள் உள்ளன.

இந்நூலில் இடம் பெற்றுள்ள பல கோயில்கள் அதிகம் புகழ் பெறாதவை. அவற்றின் புகைப்படங்களையும் இணைத்திருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.