சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வட்டியும் முதலும்

ஒரு திரைப்பட இயக்குநரின் நுட்பம், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டுகிறார் ராஜூமுருகன். வண்ணதாசன் எப்படி அவரது ரத்த

Updated On :22 ஏப்ரல் 2013, 3:07 am IST

வட்டியும் முதலும் - ராஜூமுருகன்; பக்.504; ரூ.215; விகடன் பிரசுரம், சென்னை; )044 - 4263 4283.

விகடனில் தொடராக வந்தது. அதில் 70 வாரத் தொடர்கள் மட்டும் புத்தக வடிவம் பெற்றுள்ளது.

ஒரு திரைப்பட இயக்குநரின் நுட்பம், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டுகிறார் ராஜூமுருகன். வண்ணதாசன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக்கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய ஈரத்

தமிழ்நடை ராஜூமுருகன் எழுத்தில், எல்லாப் பக்கங்களிலும்! புத்தகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். வாழ்க்கையை அவரது ஜன்னலில் அவரோடு நாமும் பார்த்துக்கொண்டிருப்போம். கட்டித் தீராத கடன்தான் வாழ்க்கை. "வட்டியும் முதலும்' முடிவுறாது.

சரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் - ஜினேஷ்குமார் எரமம்; தமிழில்: மு.ந.புகழேந்தி; பக்.96; ரூ.50; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை-98; )044 - 2635  9906.

பொதுவுடமை இயக்க முன்னோடிகளான காரல் மார்க்ஸ், ஃபிரடரிக் எங்கல்ஸ், லெனின், மா சே துங், ஹோசிமின், எர்னஸ்டோ சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்வையும், பணிகளையும் குழந்தைகளுக்கும் புரியும்விதத்தில் கூறும் நூல்.

இந்தத் தலைவர்களின் தத்துவநோக்கிலான கருத்துகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைச் சுவையாக விவரிக்கும் நூல். தலைவர்களாக அவர்கள் உருவாவதற்கான தன்மைகள் அவர்களுடைய இளமைக் காலத்திலிருந்தே  வெளிப்பட்டதை நூல் எடுத்துச் சொல்கிறது. வரலாற்றில் அவர்களுடைய பாத்திரம் எத்தகையது என்பதை சுட்டிக்காட்டவும் தவறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.