சாயி! தங்களின் சாம்ராஜ்ஜியம் வருவதாக!
சாயி! தங்களின் சாம்ராஜ்ஜியம் வருவதாக!- ஸ்ரீஜித் நாராயணன்; தமிழில்: சி.முத்தையா; பக்.196; ரூ.90; சி.முத்தையா, பட்டுக்கோட்டை-614602; )04373-237804


சாயி! தங்களின் சாம்ராஜ்ஜியம் வருவதாக!- ஸ்ரீஜித் நாராயணன்; தமிழில்: சி.முத்தையா; பக்.196; ரூ.90; சி.முத்தையா, பட்டுக்கோட்டை-614602; )04373-237804
ஸ்ரீ சத்யசாயி பாபா திரும்ப உயிர்த்தெழுந்து மறு வருகை தரப்போவதற்கான வாய்ப்பு பற்றிய ஆய்வு நூல். ஆங்கிலத்தில் ஸ்ரீஜித் நாராயண் எழுதிய நூலை பேராசிரியர் சி.முத்தையா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பாபாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற நேரடி அனுபவம், தரிசனம், கனவு மற்றும் உடல் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் ஆதாரப்பூர்வமாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நாடிகிரந்தம், சந்திர நாள்காட்டி, இஸ்லாமிய மஹதி குறித்த செய்திகள், விவிலிய மேற்கோள்கள் இவையனைத்தும் நூலில் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வலைத் தளத்தில் இந்த புத்தகத்தை இலவசமாக படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "மறுவருகையை நம்புவது ஒரு பலவீனமான சிந்தனை அல்ல. பக்தர்களின் நம்பிக்கைகளும், பிரார்த்தனைகளுமே ஸ்ரீ சத்யசாயி பாபாவை திரும்ப வருகை தரும்படி செய்யமுடியும்' என நூலின் இறுதி அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு மஹாசமாதியான பின்னும் ஸ்ரீ சத்யசாயி பாபா இன்றும் அளித்து வருகிறார் என்கின்றனர் அவரது பக்தர்கள். சாயி நம்பிக்கையாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய இந்த நூல், அனைத்துத் தரப்பினரும் கற்றுணர வேண்டிய பாடம் என்றால் அது மிகையல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...