மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம் - முகில்; பக்.493; ரூ.250; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-4263 4283.

News image
Updated On :2 ஜனவரி 2017, 12:19 am IST

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம் - முகில்; பக்.493; ரூ.250; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-4263 4283.
வாழ்கின்ற மக்களுக்கு வாழ்கிற சாதனையாளர்களே பாடமாக அமைகிறார்கள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.
உலகின் அதிவேக மனிதர் உசைன்போல்ட் முதல் டிஸ்கவரி சேனலில் காடுகளில் வழிகண்டறிந்து சாகசம் நிகழ்த்தும் பியர் கிரில்ஸ் வரை நிஜவாழ்வின் கதாநாயகர்களை நம்முன் நிறுத்தி, அவர்களைப் போல நம்மையும் நனவுலக நாயகராக்கும் முயற்சியை நூலாசிரியர் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட உசைன் போல்ட் தடகளத்தின் சரித்திரமானதையும், நடுத்தர வர்க்கத்தில் பிறந்து தனது அயராத உழைப்பால் தேசத்தை பாட்மின்டனில் தலை நிமிரச் செய்த சாய்னாநேவாலையும், தந்தையின் உதவியாலும் சளைக்காத போராட்டத்தாலும் சாதித்த மகேந்திரசிங் தோனி, உணவுக் கூடத்தில் கூட தலைகாட்டிய அரசியலை வெற்றி கொண்டு சாதனையை மட்டுமே தனக்கானதாக்கிய சமையல் கலைஞர் கோர்ட்டன் ராம்úஸ என நூலெங்கும் நம்மை வியக்க வைக்கும் மனிதர்கள் ஏராளம்.
கை, கால்கள் இல்லாமல் பிறந்தும் ஆஸ்திரேலிய நிக் வ்யுஜிஸிக் தனது விடாமுயற்சியால் தன்னம்பிக்கையின் மறு வடிவமாக புகழ்பெற்றதை படிக்கும்போது நம்மை அறியாமலே மனது சாதிக்கத் துடிக்கிறது.
ஆண்கள் மட்டுமல்ல, கூச்ச சுபாவத்துடன் பிறந்து திடீரென தனது நடனத்தால் உலகையே நிமிர்ந்து பார்க்க வைத்த பியான்úஸ நோல்ûஸயும், தீவிரவாதிகளின் தாக்குதலையும் பொருள்படுத்தாமல் சாதித்துவரும் மலேலா, பெண் புகைப்படக்கலைஞர் லின்சே அடாரியோ ஆகியோர் குறித்த தகவல்கள் திரில் படம் பார்ப்பதைப் போலவே நம்மை வியக்க வைக்கின்றன.
சாதனையாளர்களின் அனுபவ உலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்று, சாதனை புரியும் நம்பிக்கையை நமக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.