கடல் மரங்கள் - மலையாளத்தில்: வெள்ளியோடன்; தமிழில்: ஆர்.முத்துமணி; பக்.88; ரூ.70; முதற்சங்கு பதிப்பகம், 19, மீட் தெரு, கல்லூரிச் சாலை, நாகர்கோயில் -1.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிங்களர்களையும், மலாய்க்காரர்களையும் நம்பியிருக்கலாமே? எல்லாரையும் இணைத்துக் கொண்டு போராடியிருக்கலாமே?
வியட்நாம் எல்லைப்புறப் பகுதியில் உள்ள கு ஆங் ஷி பகுதியைச் சீனா வலுக்கட்டாயமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது சிக்கிமையும், அருணாசல் பிரதேசத்தையும் இணைக்க வேண்டும் என்று கேட்பதைப் போல.
இஸ்ரேலியர்கள் இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான்.
இன்னும் இவற்றைப் போல நிறைய அரசியல் விஷயங்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன. நவீன காலத்தில் பெண்கள் இன்னும் போகப் பொருளாக இருக்கிறார்கள். வெறும் உடலாகக் காட்சி தருகிறார்கள் என்று இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இவற்றை எல்லாம் படித்தவுடன் இந்நூல் தீவிரமான அரசியல் விஷயங்களைப் பேசும் ஒரு கட்டுரை நூல் என்று
எண்ணிவிட வேண்டாம்.
பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இவற்றை எழுதிய நூலாசிரியரின் அரசியல், வாழ்க்கைப் பார்வைகள் இச்சிறுகதைகளின் மூலம் வெளிப்பட்டிருக்கின்றன. எனினும் சிறுகதைகளுக்குரிய கலைத்தன்மையில் எவ்விதத்திலும் குறைவு இல்லை என்பது வியப்பைத் தருகிறது. நூலாசிரியரின் பார்வை எந்த அளவுக்குச் சரியானது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவருடன் உடன்பாடு இல்லாதவர்களும் கூட ரசித்து வாசிக்கும்படியாக சிறுகதைகள் அமைந்துள்ளன. சாதாரண மனிதர்களின் மன உணர்வுகள், விருப்பங்கள், வேதனைகள், விரக்திகளைச் சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. அளவில் சிறியதாயினும் இந்நூல் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


