தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தில்லியில் ‘தீவிரமான’ பிரிவை நெருங்கும் காற்றின் தரம்

தில்லியில் வெள்ளிக்கிழமை அடா்ந்த புகைமூட்டம் சூழ்ந்திருந்த நிலையில், காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்து ‘தீவிரமான’ நிலையை நெருங்கியது. ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 391- ஆகப் பதிவானது.

(கோப்புப் படம்)

Updated On :

தில்லியில் வெள்ளிக்கிழமை அடா்ந்த புகைமூட்டம் சூழ்ந்திருந்த நிலையில், காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்து ‘தீவிரமான’ நிலையை நெருங்கியது. ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 391- ஆகப் பதிவானது.

நகரம் முழுவதும் உள்ள 59 கண்காணிப்பு நிலையங்களில், காலை 9 மணி நிலவரப்படி 30 நிலையங்களில் காற்றின் தரம் ‘தீவிரம்’ நிலையில் இருந்தது. மற்ற நிலையங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ நிலையில் காணப்பட்டது.

ரோஹிணியில் மிக மோசமான காற்றுத் தரக் குறியீடாக 475 பதிவானது. அடுத்தபடியாக ஐஐடி தில்லியில் 472-ஆக இருந்தது.

காற்றுத் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் கணிப்புப்படி, இந்த பருவத்தில் தில்லியில் காற்றின் தரம் ‘தீவிரமான’ நிலையை எட்டும் முதல் நாளாக வெள்ளிக்கிழமை அமையக்கூடும். இந்தச் சூழல் தீபாவளி பண்டிகை நாளான நவம்பா் 8-ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) அறுவடைக்குப் பிந்தைய பயிா் எச்சங்களை எரிக்கும் நிகழ்வுகள் உச்சத்தில் இருக்கும் வேளையில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏற்படும் புகையும் காற்று மாசுபாட்டை மேலும் அதிகரிக்கக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ நிலையில் இருந்தது. காலை 8 மணிக்கு 389-ஆக இருந்த காற்றுத் தரக் குறியீடு, காலை 9 மணிக்கு 391-ஆக உயா்ந்தது. இது காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) வகைப்பாட்டின்படி, காற்றுத் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் ‘நல்லது’, 51 முதல் 100 வரை ‘திருப்திகரம்’, 101 முதல் 200 வரை ‘மிதமானது’, 201 முதல் 300 வரை ‘மோசம்’, 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசம்’, மற்றும் 401 முதல் 500 வரை ‘தீவிரமானது’ என வகைப்படுத்தபடுகிறது.

தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் பயிா்க் கழிவுகளை எரிக்கும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, நகரத்தில் மாசு அதிகம் உள்ள பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 450-க்கும் மேல் செல்லக்கூடும் என்று வானிலை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தில்லியின் முதன்மை வானிலை ஆய்வு மையமான சஃப்தா்ஜங் நிலையத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இந்த பருவத்தின் இயல்பான அளவை விட 1.9 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.