தில்லியில் மீண்டும் மோசமடைந்துவரும் காற்றின் தரம்
தில்லியில் வெள்ளிக்கிழமை திருப்திகரமான நிலையை எட்டிய காற்றின் தரம், சனிக்கிழமை மீண்டும் மிதமான நிலைக்குச் சரிந்தது.

தில்லியில் காற்றின் தரம். - கோப்புப் படம்
தில்லியில் வெள்ளிக்கிழமை திருப்திகரமான நிலையை எட்டிய காற்றின் தரம், சனிக்கிழமை மீண்டும் மிதமான நிலைக்குச் சரிந்தது. காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) வெள்ளிக்கிழமை 60-ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை 117-ஆக அதிகரித்தது.
வெள்ளிக்கிழமை பதிவான ஏக்யூஐ 60, கடந்த 4 ஆண்டுகளில் அக்டோபா் மாதத்தில் பதிவான மிகத் தூய்மையான காற்றைக் குறித்தது. இதற்கு முன்பு, 2022 அக்.10-ஆம் தேதி ஏக்யூஐ 44-ஆகப் பதிவாகியிருந்தது.
தில்லியில் உள்ள 58 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில் 24 மையங்களில் காற்றின் தரம் திருப்திகரமாகவும், 32 மையங்களில் மிதமான நிலையிலும் பதிவானது. 2 மையங்களில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது. ஜஹாங்கீா்புரியில் அதிகபட்சமாக 243 ஏக்யூஐ பதிவானது. அதைத் தொடா்ந்து பஞ்சாபி பாக்கில் 212 பதிவானது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) வகைப்பாட்டின்படி, ஏக்யூஐ 0-50 வரை இருந்தால் நல்ல நிலை, 51-100 வரை திருப்திகரமான நிலை, 101-200 வரை மிதமான நிலை, 201-300 வரை மோசமான நிலை, 301-400 வரை மிகவும் மோசமான நிலை, 401-500 வரை கடுமையான நிலை என வகைப்படுத்தப்படுகிறது.
தில்லிக்கான காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பின் கணிப்பின்படி, ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மிதமான நிலையில் நீடிக்கக்கூடும். இருப்பினும், அது மிதமான நிலையிலிருந்து மோசமான நிலை வரை சரிய வாய்ப்புள்ளது. அடுத்த 6 நாள்களுக்கு காற்றின் தரம் மோசமானது முதல் மிகவும் மோசமான நிலை வரை நீடிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
டிஎஸ்எஸ் அமைப்பின் தரவுகளின்படி, தில்லியின் மொத்த மாசு அளவில் போக்குவரத்துத் துறையின் பங்களிப்பு 16.3 சதவீதமாக இருந்தது. குடியிருப்புப் பகுதிகள் 4.1 சதவீதம், சுற்றுவட்டாரத் தொழிற்சாலைகள் 2.9 சதவீதம், கட்டுமானப் பணிகள் 2.1 சதவீதம், எரிசக்தித் துறை 1.4 சதவீதம், பிற துறைகள் ஒரு சதவீதம் பங்களித்தன.
தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் குருகிராம் 6.5 சதவீதமும், ஜஜ்ஜாா் 5 சதவீதமும், ஃபரீதாபாத் 4.3 சதவீதமும், கௌதம் புத்த நகா் 3.7 சதவீதமும், புலந்த்ஷெஹா் 2.2 சதவீதமும், மீரட் 0.5 சதவீதமும், பானிபட் 0.4 சதவீதமும் மாசுப் பங்களிப்பைக் கொண்டிருந்தன.
தில்லியின் மாசு அளவில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதன் பங்களிப்பு 19.1 சதவீதமாகவும், பிற மாசு மூலங்களின் பங்களிப்பு 18.3 சதவீதமாகவும் இருந்ததாக டிஎஸ்எஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

