கதை சொல்லி
கதை சொல்லி - கே.எஸ்.ஆர்.குறிப்புகள் - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்; பக்.158; ரூ.150; கலைஞன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 5641.


கதை சொல்லி - கே.எஸ்.ஆர்.குறிப்புகள் - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்; பக்.158; ரூ.150; கலைஞன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 5641.
"கதை சொல்லி' இலக்கிய இதழின் இணை ஆசிரியரான நூலாசிரியர், அதில் எழுதிய குறிப்புகளின் தொகுப்பாக, சில கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
1857 - ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி பற்றிய கட்டுரை, 1809 - ஆம் ஆண்டு குமரி மாவட்டம் சாஸ்தா கோவில்விளையில் பிறந்த முத்துக்குட்டி, பின்னர் ஸ்ரீ வைகுந்தர் ஆனது; திருவிதாங்கூர் மன்னர் மற்றும் மேல்சாதி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியதைப் பற்றிக் கூறும் "வைகுந்தசாமி பக்தி இயக்கம்' கட்டுரை, 1939 -இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வைத்தியநாதய்யர் தலைமையில் நடந்த "ஒடுக்கப்பட்டோர் ஆலயப் பிரவேசம்' பற்றிய கட்டுரை, வைகை நதியின் கிளை நதியாக இருந்த "கிருதுமால் நதி' இன்று சாக்கடையாக மாறிப் போன அவலத்தைக் குறிப்பிடும் குறிப்பு என நமது வரலாறு தொடர்பான செய்திகள்-
"கோக், பெப்சிக்குத் தடை' வேண்டுமெனச் சொல்லும் கட்டுரை, புவிவெப்பமாதல் தொடர்பான " உலகம் உஷ்ணமாகிறது'கட்டுரை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், விவசாயிகளுடைய பல்வேறு பிரச்னைகள் தொடர்பான கட்டுரைகள் என நூலின் எல்லை பல்வேறு திசைகளில் விரிந்து செல்கிறது.
"எம்மா' எழுதிய ஜேன் ஆஸ்டின் பற்றிய குறிப்பு, மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய டார்வின் கோட்பாடு பற்றிய குறிப்பு, ஜோசப்.சி.குமரப்பா, ஏ.கே.இராமானுஜம் ஆகியோரைப் பற்றிய குறிப்புகளும் நூலில் அடங்கியுள்ளன.
நீலபத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் பற்றிய அறிமுகம், ஆ.மாதவன் படைப்புகள் பற்றிய கட்டுரை, கரிசல் இலக்கியம் பற்றிய கட்டுரை, திரைத்துறையினர் பற்றிய குறிப்புகள் என பல்வேறு பாதைகளில் வாசகர்களை அழைத்துச் செல்லும் சிறந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...