இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை-மருதன்- பக். 440; ரூ.475, கிழக்கு பதிப்பகம், சென்னை-600014, 044-42009603.
சிந்து சமவெளி நாகரிகம் முதல் தற்போது வரை இந்தியாவின் வரலாற்றைப் பலர் பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளனர். இந்தப் புத்தகம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பார்வையில் இந்தியாவின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது.
கிரேக்கரான ஹொரோடோட்டஸில் தொடங்கி, தீஷியஸ், நியார்கஸ், மெகஸ்தனிஸ், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்க்கோபோலோ, இபின் பதூதா, நிக்கோலா காண்டி, வாஸ்கோடா காமா, சீகன் பால்கு எனப் பல வெளிநாட்டவர்களின் குறிப்புகள் இதில் விரிவாக உள்ளன.
இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் விவரங்கள், அவர்கள் யாரைச் சந்தித்தார்கள், எந்த வழியில் பயணம், அவர்கள் காலத்திய இந்தியாவின் நிலை, ஆட்சி செய்தவர்கள், மக்களின் நிலை, கல்வி, சமூகம் உள்ளிட்டவற்றின் நிலை எனப் பல்வேறு தளங்களுக்கும் புத்தகம் பயணிக்கிறது.
மாவீரன் அலெக்சாண்டரின் இந்தியாவைப் பற்றிய குறிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வர்த்தகம், பெளத்த மதத்தின் வளர்ச்சி, இந்தியாவின் ஆட்சி, தென்னிந்தியப் பகுதிகளின் சிறப்புகள், சந்திரகுப்தர், அசோகர், ஹர்ஷர், அரேபிய அரசர்கள், கஜினி முகமது, அக்பர் உள்ளிட்ட முகலாய அரசர்கள், விஜயநகர மன்னர்கள் என அள்ள அள்ளக் குறையாத வரலாற்றுத் தகவல்களைப் புத்தகம் வழங்குகிறது.
ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்பு, கிறிஸ்தவப் பாதிரியார்களின் பணிகள் எனப் பல்வேறு விவகாரங்களை விறுவிறுப்புடன் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமல்லாமல், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் படங்கள், அரசர்களின் ஓவியங்கள், சிலைகளின் படங்கள், தொல்பொருள் சின்னங்களின் படங்கள் ஆகியவையும் புத்தகத்தை சுவாரசியம் கொண்டதாக்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சங்கரன்கோவில் தொகுதியில் ரூ.52 கோடியில் நான்குவழிச் சாலைப் பணி -எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

திருவேங்கடம் வட்டார வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டு தீ: செடி, கொடிகள் எரிந்து நாசம்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

