தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

உங்களில் ஒருவன் (தன் வரலாறு - பாகம் 1 ) - மு.க. ஸ்டாலின்;  பக். - 336; ரூ. 500, பூம்புகார் பதிப்பகம், சென்னை- 600 108; 044-25267543.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தில்,   அவரின் 23 வயது வரையிலான வாழ்க்கை இடம் பெறுகிறது. 
நாலரை மாதக் கைக் குழந்தையாகத் திருச்சி சிறைக்கு (கல்லக்குடி பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்ட)  தந்தை கருணாநிதியைப் பார்க்கச் சென்ற  
ஸ்டாலின், இளைஞனாக அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சென்னை சிறைவாசம் வரையிலான வரலாற்றுப் பதிவு இந்த நூல்.

சிறு வயதில் இலக்கை மிகச் சரியாகத் தீர்மானித்தால் வெற்றி பெற முடியும் என்பதுதான் இன்றைய தலைமுறைக்கு  நான் சொல்லும் ஒற்றை வழிகாட்டி நெறிமுறை' என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார். நூல் நெடுகிலும் ஸ்டாலின் வாழ்க்கையுடன் அரசியல் நிகழ்வுகளையொட்டிய  தலைவர்களின் பேச்சும் எழுத்தும் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.

பாட்டி அஞ்சுகம் அம்மையார் பற்றிய நினைவுகள்,  கருணாநிதிக்கு மட்டுமல்ல, அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி என அன்றைய தலைவர்களுக்கும் அவர் அன்னையாகத் திகழ்ந்தது பற்றிய குறிப்புகள் நெகிழ்ச்சியானவை.

மாணவர்கள் இலவச பேருந்துப் பயணம் தொடங்கியதற்கு விடை இந்நூலில் இருக்கிறது. ஆண்டு வரிசைப்படி என்றில்லாமல் வாழ்க்கை நிகழ்வுகளையொட்டி  அரசியலுடனேயே வரலாறு நகர்வதும் நல்ல உத்தி. இளைஞர் தி.மு.க., அண்ணாவுடன் அணுக்கம், சைதை பிரசாரம், முரசே முழங்கு விழாவில் கருணாநிதி, எம்ஜிஆர் பேச்சு, மோதிரம்  அணிவித்தபோது எழுந்த நினைவு, மாநாடாக நடந்த திருமண நினைவுகள்... எனச் செல்கிறது நூல்.

மு.க. ஸ்டாலின் தொடர்பான புகைப்படங்களில் பலவும் இடம் பெற்றிருப்பது சிறப்பு.  சிறப்பானநூல் தயாரிப்பு. நூலைப் படித்து முடித்ததும் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியையும் மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்று நினைக்கச் செய்வது உங்களில் ஒருவனுடைய வெற்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.