பாரதியின் நெஞ்சை அள்ளும் சிலம்பு - புலவர் இ.ப.நடராசன்; பக். 175; ரூ.175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044-2536 1039.
மகாகவி பாரதியார் குறித்து எண்ணற்ற நூல்கள் வந்துகொண்டிருந்தாலும், சிலப்பதிகாரத்தையும் பாரதியார் பாடல்களையும் அணுஅணுவாகப் பயின்று நோக்கி நூலாசிரியர் எழுதியுள்ள இந்த நூல் சிறப்புடையது.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் பாரதியாரை ஈர்த்தது குறித்தும், அதனை 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' என்றும் 'தமிழன்னையின் மணிஆரம்' என்றும் பாரதியார் வர்ணித்தது தமிழின் பெருமையைப் பறைசாற்றுகிறது.
பாரதியின் நெஞ்சை அள்ளிய சிலம்பு நூலில் 8 கட்டுரைகள் உள்ளன. மதுரையில் கண்ணகியின் வீரத்தை பாரதியார் சிறப்பான முறையில் எழுதியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு சுருக்க வடிவிலான, சிறப்பான முறையிலான ஒரு நூலை வாசித்த திருப்தி மனதில் எழுகிறது.
முதல் 4 கட்டுரைகள் சிலம்பின் எல்லா பகுதிகளும் பாயிரம் தொடங்கி முப்பது காதைகளும் பாரதியின் நெஞ்சை அள்ளியது குறித்தும், ஐந்தாவது கட்டுரை பாரதியின் 'ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாடலின் சிறப்பு குறித்தும் விளக்கியுள்ளன.
பாரதியார், தமிழை அறிய வேண்டியோர் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?

'திருச்சி குலுங்கட்டும்' - மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை: வீடு, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வளவு..?
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

