கிளைவேர்-மு.சரவணன்; பக். 176; ரூ.150; செண்பகா பதிப்பகம்; சென்னை-17; 044-24331510.
20-ஆம் நூற்றாண்டிலிருந்து 'இல்லத்துப்பிள்ளைமார்' என்ற பெயரால் இனம் காணப்படும் "ஈழவர்' சமுதாயத்தின் ஆணிவேரை பற்றிய தேடலே இந்நூல். வரலாற்றுப் பதிவுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்று மாந்தர்களின் வாழ்க்கை, நடைமுறையில் உள்ள பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் இச்சமுதாயத்தின் ஆதிகாலம் குறித்து ஆய்வு செய்து 9 தலைப்புகளில் கட்டுரையாகத் திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர்.
சேர இனத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் ஈழவர் சமுதாய மக்கள் தனிச் சிறப்பு வாய்ந்த தாய்வழி மரபினர் ஆவர். சேர மன்னர்கள் தமது ராஜ்ஜியத்தை மகனுக்கு வழங்காமல் தன் சகோதரி மகனுக்கு வழங்குவர். அதுபோல ஈழவர் சமுதாயத்திலும் தாய்மாமனின் வாரிசாக, அவர்களின் சகோதரியின் மகன்கள், மகள்கள் வருகின்றனர்.
கேரளத்தில் நம்பூதிரிகளுக்கு அடுத்த நிலையில் இருந்த நாயர் வகுப்பினர்கூட கருவறைக்குள் நுழைய முடியாத காலத்தில், ஈழவ சமுதாயத்தில் பிறந்த நாராயணகுரு, பல கோயில்களைக் கட்டி ஆலயப் பிரவேசத்துக்கு புதிய வழிமுறையைக் கொண்டு வந்த வரலாறு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.
ஈழவர்களின் நாட்டுப்புற பாடலான 'வடக்கன் பாட்டுகள்' ஈழவர்களின் முன்னோர்கள் ஈழத்திலிருந்து வந்தவர்கள் என்கிறது; மற்றொரு நாட்டுப்புற பாடல் ஈழவ மன்னனை ஈழவ இளவரசி மணந்தார் என்கிறது போன்ற தகவல்கள் சுவாரஸ்யமானவை.
ஈழவர் சமுதாயத்தைத் தவிர்த்து தமிழக வரலாற்றைக் கூற முடியாது என பல்வேறு ஆதாரங்களை முன்வைக்கிறது இந்நூல். ஆய்வு நூலாக இருந்தாலும் சுவையான எழுத்து நடை நூலுக்கு வலு சேர்க்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
போர்க் கூட்டணி? பாக். ராணுவத் தலைமைத் தளபதியுடன் சௌதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

