திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அமுதசுரபி

அட்டைப் படத்தில் சீதையோடு ஸ்ரீராமர் பரமபதம் விளையாடும் காட்சி நேரில் பார்க்கும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 2:13 pm

DIN

அமுதசுரபி - பக். 242; ரூ.175. 
அட்டைப் படத்தில் சீதையோடு ஸ்ரீராமர் பரமபதம் விளையாடும் காட்சி நேரில் பார்க்கும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.  திருப்பூர் கிருஷ்ணனின் "அடுத்த பிறவியில் தூது' என்ற அட்டைப்பட ஆன்மிகக் கட்டுரையானது ராமர் சீதையோடு நடத்தும் உரையாடல் படிக்கவே மெய்சிலிர்க்கிறது.
வாஸந்தி, எஸ்.சங்கரநாராயணன், நரசய்யா, சீதா ரவி, சுப்ர பாரதி மணியன் உள்ளிட்ட 10 எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் வித்தியாச கோணம். இந்திரா பார்த்தசாரதியின் "வயிறும் சாதியும்' நாடகத்தில் அனைத்துப் பிரிவினரிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர் உண்டு என்று சொல்கிறது. சுமன் ஓவியம் தத்ரூபம்.
எழுத்தாள ஜாம்பவான்களான விக்கிரமன், அகிலன், நா.பா., ராஜம் கிருஷ்ணன், கரிச்சான் குஞ்சு,  கவிஞர் மீரா உள்ளிட்டோர் குறித்த பேனா ஓவியங்கள் இளைய தலை
முறையினருக்கு நல்லதோர் அறிமுகம்.
தெ.ஞானசுந்தரம், அரங்க ராமலிங்கம் உள்ளிட்டோரின் கட்டுரைகள் பழந்தமிழ் இலக்கியத்தைப் பேசுகின்றன. டி.எஸ்.பாலையா, சிவாஜி கணேசன், கமலஹாசன் குறித்த 
கட்டுரைகள் அபாரம். அட்டைப்படம் வரைந்துள்ள ஓவியர் சங்கர்லீயின் பேட்டி மூலம் கிளிக் ரவி நல்ல தகவல்களைக் கொண்டு வந்துள்ளார்.
ஸ்ரீதர் சாமா எழுதிய "சத்குரு சிவன்சார்',  சுவாமி கமலாத்மானந்தர் எழுதிய "ஏழை தொழிலாளர்கள் இறைவன் வடிவங்கள்', சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய விவேகானந்தர் நம்மிடம் வேண்டுவது இரும்புத் தசையும் எஃகு நரம்பும்!' போன்ற ஆன்மிகக் கட்டுரைகள் நல்லதொரு வழிகாட்டுதலைப் படிப்போருக்கு அளிக்கும்.
ஆன்மிகம், கலை, இலக்கியம், சினிமா, சிறுகதைகளை உள்ளடக்கி பல்சுவைப் பெட்டகமாக இந்த மலர் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.