திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கலைமகள்

நாம் யாரையும் வெறுக்கக்கூடாது என்பதே பகவானின் எண்ணம் என்பதை நினைவூட்டும் சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், மகா பெரியவரின் கருணை உள்ளம் குறித்து ஆன்மிகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 2:23 pm

DIN

கலைமகள்-  பக்.224; ரூ.200.

நாம் யாரையும் வெறுக்கக்கூடாது என்பதே பகவானின் எண்ணம் என்பதை நினைவூட்டும் சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், மகா பெரியவரின் கருணை உள்ளம் குறித்து இந்திரா செளந்தரராஜன், சேஷாத்ரி ஸ்வாமிகளை மையப்படுத்தி சந்நியாசம் குறித்து நல்லி குப்புசாமி செட்டியார் ஆகிய மூவரின் எழுத்துகள் ஆன்மிகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.

மாலன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் எழுதிய சிறுகதைகள் இம்மலருக்கு தனித்துவத்தைத் தருகின்றன.

வார்த்தைகளுக்கு வலிமை உண்டு; ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன என்பதை பேராசிரியர் தி.இராசகோபாலனின்  'பாரதி ஒரு சொல் அலங்காரன்' கட்டுரை எடுத்துரைக்கிறது.
ஒரு நாவல், திரைப்படமாக மாற்றப்படும்போது அதன் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்கும் காரணிகள் என்ன என்பதை ஜெ.பாஸ்கரனும், எழுத்தாளர் கல்கியின் பார்வையில் வந்தியத்தேவனின் பல பரிணாமங்களை சி.வி.சந்திரமோகனும் எடுத்தியம்புகின்றனர்.
ஆண்டாளின் வரலாறு, ஒவ்வொரு தமிழ் மாதமும் ஆண்டாள் நாச்சியாரை எவ்விதம் பெருமைப்படுத்துகின்றன - தமிழ் இதழ்கள் - காய் கனிகளில் உள்ள ஊட்டச் சத்துகள் - கவிதைகள் என பல்வேறு அம்சங்களை  உள்ளடக்கியும் நேர்த்தியான ஓவியங்களுடனும் வெளியாகியுள்ள இம்மலர் தீபாவளிக்கும் 91 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கும் கலைமகள் இதழுக்கும் பெருமை சேர்க்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.