விகடன்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி விமூர்த்தானந்தரின் வாழ்த்துரையில் தொடங்கி, தீபம் ஏற்றும் விளக்குகள், சென்னப்பட்டணம் பொம்மைகள், நேர்காணல்களும் இம்மலரை அலங்கரிக்கின்றன.


விகடன் - பக். 400; ரூ. 160.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி விமூர்த்தானந்தரின் வாழ்த்துரையில் தொடங்கி, தீபம் ஏற்றும் விளக்குகள், சென்னப்பட்டணம் பொம்மைகள், திண்டுக்கல் மண்பாண்டங்கள், இலங்கைத் திருவிழாக்கள், பண்டைய தமிழர்களின் ஆபரணங்கள் ஆகியவை குறித்த கட்டுரைகளும், வண்ணதாசன், பெருமாள் முருகன், பட்டுக்கோட்டை பிரபாகர், சு. வேணுகோபால் உள்ளிட்டோரின் சிறுகதைகளும், ஸ்டாலின் சரவணன், போகன் சங்கர், ஆத்மார்த்தி, கலாப்ரியா, கண்டராதித்தன் உள்ளிட்டோரின் கவிதைகளும், மணியம் செல்வன், விஜய் சேதுபதி, ரேவதி சங்கரன், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நடனக் கலைஞர்கள் வி.பி. தனஞ்ஜெயன் - சாந்தா தனஞ்ஜெயன் ஆகியோரின் நேர்காணல்களும் இம்மலரை அலங்கரிக்கின்றன.
எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டையொட்டி அவர் குறித்த சிறப்புக் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. "ஓவியர் திலகம்' என்று புகழப்படும் புதுக்கோட்டை எஸ். ராஜாவின் கடவுள் ஓவியங்கள் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. இம்மலரின் குறிப்பிடத்தக்க அம்சமாக, தலைக்காவிரியில் தொடங்கி பூம்புகார் வரையிலான காவிரியாற்றின் பயணத்தை விவரிக்கும் "புனல் பரந்து பொன் கொழிக்கும் காவிரி' கட்டுரையைக் (மகுடேசுவரன்) குறிப்பிடலாம். அதுபோல், முதல் சுதந்திரப் போருக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வாண்டாயத்தேவன் பற்றிய கட்டுரையும் (வெ. நீலகண்டன்) மிகச்சிறப்பு.
ஆன்மிகம், திரைத்துறை, சின்னத்திரை, கர்நாடக இசை, விளையாட்டு என எல்லாத் துறைகளுக்கும் பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...