விஜயபாரதம்
சமீப ஆண்டுகளில் ஆன்மிக மகான்கள், சமயப் பெரியவர்கள் அல்லது ஜோதிடர்களிடம் சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, குலதெய்வக் கோயிலுக்கு கடைசியாக எப்போது சென்றீர்கள் என்பதுதான்.


விஜயபாரதம் - பக். 390; ரூ. 100.
சமீப ஆண்டுகளில் ஆன்மிக மகான்கள், சமயப் பெரியவர்கள் அல்லது ஜோதிடர்களிடம் சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, குலதெய்வக் கோயிலுக்கு கடைசியாக எப்போது சென்றீர்கள் என்பதுதான். தொடர் பிரச்னைகளுக்கு தீர்வு அங்குதான் இருக்கிறது என்பதே அந்தக் கேள்விக்கு அர்த்தம். அந்தச் சிந்தனையை மக்கள் மனங்களில் இன்னும் மேலோங்கச் செய்திருக்கிறது இந்த மலர்.
அகரமாங்குடி தென்னாயிர அய்யனார், காயாமொழி குதிரைமொழித்தேரி கற்குவேல் அய்யனார், கருப்பராயர், பச்சையம்மன், சொரிமுத்து அய்யனார், சிறுவாபுரி முருகன், திருக்கடிகை ஸ்ரீயோக நரசிம்மர், மனப்பாக்கம் சப்த கன்னியர்கள் என்று வரிசைப்படுத்திக் கொண்டே செல்லக்கூடிய அளவில் நம்மை காக்கும் எண்ணற்ற குல தெய்வங்கள், கிராம தேவதைகள் அருள்பாலிக்கும் தலங்கள் குறித்த கட்டுரைகள் உள்ளன.
புலம்பெயர்ந்ததால் மறந்துபோன குலதெய்வங்களை அறியவும் சில வழிமுறைகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது மலர். குலதெய்வ வழிபாடு என்பது விஞ்ஞானத்துடன் ஒத்துப்போனது, அறிவியல் உண்மைகளும் இருக்கின்றன என்பதற்கு மலரில் விளக்கம் உண்டு.
சுக, துக்கங்களின்போது நாம் சரண் அடைவது குலதெய்வத்தையே. அத்தகைய குலதெய்வங்கள் பலவித பெயர்களில், முதன்மை தெய்வங்களாக, பரிவார தேவதைகளாக என பல வடிவங்களில் காட்சி அளிக்கின்றன. அத்தகைய தெய்வங்களில் ஒருசில படங்கள் மலரின் அட்டையை அலங்கரிக்கின்றன. நமது குலம் விளங்க, நாம் கொண்டாடவேண்டிய குலதெய்வங்களின் அருளை நமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை உணர வைத்திருக்கிறது இந்த மலர்.
லேடீஸ் ஸ்பெஷல் - பக்.224; ரூ.200.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...