தென்னிந்தியாவில் பாபா சாகேப் அம்பேத்கர் - பேரா. க.ஜெயபாலன்; பக். 336; ரூ.350; பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை-40; 044- 42663840.
அம்பேத்கர் தென் இந்தியாவில் 1932-ஆம் ஆண்டிலிருந்து 1954 வரை மேற்கொண்ட பயணங்கள், நிகழ்ச்சிகளில் அவர் பேசியது, சந்திப்புகள், தருணங்கள் குறித்து நூல் எழுதப்பட்டுள்ளது. 50 தலைப்புகளில் நிகழ்வுகளை சுருக்கமாக, வந்ததன் நோக்கத்தை தெள்ளத் தெளிவாகவும் பதிவு செய்திருப்பது நூலாசிரியரின் சிறப்பு.
ராஜாஜி, காமராஜர், பெரியார் ஈ.வெ.ரா., டி.டி.கிருஷ்ணமாச்சாரி, அண்ணா, இரட்டை மலை சீனிவாசன் உள்ளிட்டோருடனான சந்திப்புகள் வியக்க வைக்கிறது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் அம்பேத்கர் ஆற்றிய உரையில் நாட்டுப் பற்றும், ஒற்றுமை வலியுறுத்துவதும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. 20 வயதிலேயே அம்பேத்கருக்கு வரவேற்பு அளித்த சத்தியவாணி முத்து உள்ளிட்ட அறியாத தகவல் இடம்பெற்றுள்ளது. வாழும் காலத்திலேயே இலக்கியத்துக்காக உஸ்மானியப் பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் அம்பேத்கர் பெற்றுள்ளது அதிசயம்தான் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கர் பார்வையில் பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதச் சுவாமிகள் சந்திப்பு போன்ற கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
அம்பேத்கரை குறிப்பிட்ட ஜாதியத் தலைவராக முன்னிறுத்துவதைத் தவறு என்றும் அவர் பொதுவான தேசியத் தலைவர் என்பதை சுட்டிக் காட்டும் வகையிலும் இந்த நூல் இருக்கிறது. அனைவரும் படித்தறிய வேண்டிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

