சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

புறநானூற்று விழுமியங்கள் - புலவர் வே. பதுமனார்; பக். 200; ரூ. 200; ஜெயக்கொடி பதிப்பகம், குடியாத்தம்- 632602; ✆ 9443490703. 

சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களைப் புறநானூற்றில்  தாம் உய்த்துணர்ந்து, ஊறித்திளைத்த பாடல் வரிகளிலிருந்து  இருபது கட்டுரைகளில் வடித்துள்ளார் நூலாசிரியர். இதன்வழி புறநானூற்றுச் சித்திரங்களை எழுத்தில் வடித்திருக்கும் மு. வரதராசனார், கி.வா.ஜ... என்ற வரிசையில் இணைந்திருக்கிறார்.

'யாதும் ஊரே; யாவரும் கேளிர்'  என்ற ஒற்றை வரியே பரவலாகப் பேசப்படும் நிலையில் முழுப் பாடலும் கூறும் விழுமியங்களை வரிவரியாக விளக்கும் அவர், 'தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன' என்ற வரிக்குக் கூறும் ரோஜாப் பூக்கள் எடுத்துக்காட்டு சிறப்பு.

புறநானூற்றுப் பாடலை விளக்கும் வேளையிலேயே, திருக்குறள்,  நாலடியார், ஒüவையார், பாரதி, கண்ணதாசன்.. என அறிமுகப்படுத்தி,  அனைவரையும் தொட்டுச் செல்கிறார். 'செல்வத்துப் பயன்' பற்றிக் கூறுகையில், 'இல்லானை இல்லாளும் வேண்டாள்'  என ஒüவையில் தொடங்கி,  மகாத்மா காந்தியின் வாழ்வுடன் எண்ணற்ற மேற்கோள்கள்!

அறம் பாடிய அறம் பற்றி எழுதும்போது, ஆலத்தூர்க் கிழார் வரையறுத்த மூன்று தீவினைகளை அறிமுகப்படுத்துவதுடன், பாண்டியன் அறிவுடைநம்பியின் பாடலையும் நடைமுறையில் ஆசிரியப் பணியின் சிறப்பை, சங்கர் தயாள் சர்மா, அப்துல் கலாம் ஆகியோர் வாழ்வுடன் இணைத்து விளக்குகிறார்.

'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என்பதை மாங்குடி மருதன் இளநாகனாரின் புறநானூற்றுப் பாடல்வழி விளக்கும்போது, வள்ளுவர், கம்பர், பரிமேலழகர் ஆகியோரின் பாடல்களை மட்டுமின்றி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலையும் துணைக்கொள்கிறார் ஆசிரியர்.

யாரோடு நட்பைக் கொள்வது?,  நல்வினையே நாளும் செய்வோம் என்பன போன்ற சில இயல்கள் பேசும் விஷயங்களோ குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டியவை.  

தமிழ்ப் பெருமையை அறிவதற்காகப் பரிசளிக்கத்தக்க படைப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.