சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

இந்த ஆயுதங்களால்தான் - அமர்காந்த் (தமிழாக்கம் - கிருஷாங்கினி); பக்.1,057; ரூ.1,330; சாகித்திய அகாதெமி, சென்னை-18; ✆ 044-24311741.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற 'இன்ஹின் ஹத்தியாரோன் சே' எனும் ஹிந்தி மொழியில் வெளியான நாவலை கிருஷாங்கினி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  தனது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்தின் பலியா எனும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள மக்களிடம் இருந்த சுதந்திரப் போராட்டத் தாக்கத்தை நாவலாசிரியர் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.

இந்த நாவல் 1942-இல் நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது பலியாவுக்கு பத்து நாள் சுதந்திரம் கிடைக்கிறது. காந்தி, நேரு  போன்ற தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளாமல் அவர்களின் அஹிம்சை, சத்யாகிரகம், ஒத்துழையாமை எனும் தத்துவத்தை கொண்டு மக்கள் போராடினர்.  பத்து நாள்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தனர். பின்னர் ஆங்கிலேய ராணுவப்படை சுதந்திரத்தை பறிக்கிறது. இருந்தாலும், இந்தச் சுதந்திரத் தாகம் போராட்டக்காரர்களிடமிருந்து அனைத்து மக்களிடமும் தொற்றிக் கொள்கிறது.

இதோடு அந்த  காலகட்டத்தில் இருந்த சமூக அமைப்பை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக கல்வி, பெண் விடுதலை உள்ளிட்ட சமூக விடுதலையை முன்னிறுத்தியுள்ளார். 

டேலா, நம்ரதா, பகஜோகினி உள்ளிட்ட பெண் கதாபாத்திரங்கள் கதையில் உயிரோட்டமாக வந்து செல்கின்றனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் அது கடைக்கோடி மக்கள் வரை ஏற்படுத்திய தாக்கத்தையும் அகிம்சை எனும் ஆயுதத்தைக் கொண்டு தான் சுதந்திரத்தை பெற முடியும் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் அமர்காந்த். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.