புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

மகாகவி பாரதியாரின் ஒரு சில ஆங்கில படைப்புகளின் தமிழாக்கம்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 9:54 am

மகாகவி பாரதியாரின் ஒரு சில ஆங்கில படைப்புகளின் தமிழாக்கம் - தென்காசி தங்கபாண்டியன்; பக்.128; ரூ.90; கதிர்காந்தம் பிரசுரம், செங்கோட்டை; ✆ 94426 07140.

கனடாவில் வசிக்கும் மீரா தனது முப்பாட்டனரான மகாகவி பாரதியாரின் ஆங்கிலக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்த நூலை மூத்த வழக்குரைஞரும் தென்காசி முன்னாள் எம்எல்ஏவுமான டி.எஸ்.ஆர். வேங்கட

ரமணா, மருத்துவர் தங்கபாண்டியனிடம் அளிக்க, அவர் இதில் சில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அக்கட்டுரைத் தொகுப்பே இந்த நூல்.

தங்கபாண்டியன் ஏற்கெனவே பாரதியார் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.  இவர் 'ஆஷ் கொலை' என்கிற பாரதியின் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து பாராட்டு பெற்றவர். அதன் தொடர்ச்சியாக,  ஹிந்து, நியூ இந்தியா போன்ற பத்திரிகைகளில், கட்டுரையாக, ஆசிரியருக்குக் கடிதமாக, பாரதியார் எழுதிய சுமார் 45 ஆக்கங்களைத் தமிழில் தந்திருக்கிறார்.

பதிப்பாக்கங்களும் தமிழ்மரபும், தேசிய இயக்கம், மொழியும் இலக்கியமும், சமூக நீதி, தத்துவக் கட்டுரைகள் என் தலைப்புகளின் கீழ் இடம்பெற்ற  45 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆண்டாள், நம்மாழ்வார், சென்னை மாகாணத்தில் அரசியல் பரிணாம வளர்ச்சி, இந்தியாவும் உலகமும், இந்தியாவும் போரும், தேசிய காங்கிரஸ்,  நாட்டுப் பற்றும் மதபேதங்களும்,  உரிமைகளும் கடமைகளும், வட்டார மொழிகள், மகளிரின் இடம், சாதிப் பாகுபாடு குற்றம், காதலும் கல்யாணமும், ஊழ் - விதி, இறவாமை ஆகிய கட்டுரைகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. கட்டுரைகள், பாரதியார் அசலாகத் தமிழில் எழுதியது போன்ற மொழிபெயர்ப்புப் பாராட்டத்தக்க முயற்சி.  பாரதி அன்பர்களுக்கு இந்த நூல் புதிய அனுபவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.