சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட்டுகள் சாதித்தது என்ன?

News image
Updated On :3 ஜூலை 2023, 1:03 pm

DIN

சாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட்டுகள் சாதித்தது என்ன? - இரா. பாரதிநாதன்; பக். 112; ரூ.145, புரட்சி பாரதி பதிப்பகம், ஆவடி, சென்னை 55; ✆ 90430 50666.

சாதி ஒழிப்புக்காக கம்யூனிஸ்ட்டுகள் எதுவும் செய்ததில்லை என்பதைப் போல அண்மைக் காலமாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் போன்ற சிலர் பேசிவருவதற்குப் பதிலளிப்பதாக வெளிவந்திருக்கிறது இந்த நூல்.

சாதி - பண்ணையடிமைத்தன ஒழிப்பிலும் கம்யூனிஸ்ட்டுகள் என்னென்ன இன்னல்களைக் கடந்திருக்கிறார்கள், எத்தனை உயிர்களை இழந்திருக்கிறார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டும் வகையில் வரலாற்றின் பல்வேறு காலங்களையும் நிகழ்வுகளையும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

இவ்வாறு பேசும் அம்பேத்கரிஸ்டுகளைத் தவறான பிரசாரத்தை நம்பிப் பேசுவோர், திட்டமிட்டே பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்க விரும்புவோர் என வகைப்படுத்தி அம்பலப்படுத்தும் நூல்.

பகத் சிங்கில் தொடங்கி, தெலங்கானாவில் பொட்டுக்கட்டிய பெண்களை மணந்துகொண்ட கம்யூனிஸ்ட்டுகள், ஸ்ரீகாகுளம் உழவர் போராட்டம் எனத் தொடருகிறது நூல்.

பிராமணரான கம்யூனிஸ்ட்  பி. சீனிவாசராவ் எவ்வாறு கீழத் தஞ்சை மாவட்டத்தில் மாபெரும் புரட்சிக்குக் காரணமானார்? சாணிப்பாலும் சவுக்கடியும் எவ்வாறு ஒழிந்தது, தாழ்த்தப்பட்டோர் எவ்வாறு தலைநிமிர்ந்தார்கள் என்பது விரிவாகக் கூறப்படுகிறது.

பி.சீனிவாசராவ் வரிசையில் தாழ்த்தப்பட்டோர் பக்கம் நின்று தன் சாதியினரையே எதிர்த்த வாட்டாக்குடி இரணியன், சாம்பவானோடை சிவராமன், ஏ.எம். கோபு என இன்னும்  குறிப்பிடப்பட வேண்டிய எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

நக்சல்கள் பரவலும் கோபாலகிருஷ்ண நாயுடு கொலையும், தருமபுரி சாதியொழிப்பில் தீவிரவாத இளைஞர்களின் முன்னெடுப்புகள், அழித்தொழிப்புகள், தமிழரசன், கலியபெருமாள் செயல்பாடுகள் எனச் செல்கிறது நூலின் பதிவுகள். மேலும் கூடுதலான நிகழ்வுகளையும் தரவுகளையும் சேர்த்து, இன்னும் விரிவாக எழுதுவதற்கு ஆதாரமான இந்த நூல், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் படித்தறிய வேண்டிய ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.