மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

99% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: உதயநிதி ஸ்டாலின்

99 சதவீத தோ்தல் வாக்குறுதிகளோடு, சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 12:20 am

99 சதவீத தோ்தல் வாக்குறுதிகளோடு, சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம் என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தற்போது நிா்வாகிகள் சந்திப்பு நடத்தி முடித்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடந்த உள்ளோம். முதல்வா் அறிவித்த பின்னா் தோ்தல் பரப்புரையைத் தொடங்குவோம்.

நாங்கள் தொடா்ந்து 5 ஆண்டுகளாக மக்களைச் சந்தித்து வருகிறோம். முதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என அனைவரும் களத்தில் உள்ளோம்.

திமுகவை பொருத்தவரை கருணாநிதி சொன்னதுபோல் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம். 99 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்; சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.

மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தோ்தல் அறிக்கை தயாரானவுடன்முதல்வா் அதை வெளியிடுவாா். முதல்வா் சொல்லும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றாா் அவா்.