நல்லோர் போற்றும் நல்லி - தொகுப்பு ஆர்.நடராஜன்; பக்.178; ரூ.100; ப்ரெய்ன் பேங்க், சென்னை-17; ✆ 044- 2815 1160.
தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் குறித்த இந்த நூல் 2011-ஆம் ஆண்டில் வெளியானது. கூடுதல் விவரங்களுடன் இரண்டாம் பதிப்பாகத் தற்போது வெளியாகியுள்ளது.
ஆன்மிகம், கலை, இலக்கியம், தொண்டு, உதவிபுரியும் பாங்கு... என்று பல்வேறு தனித்துவங்களைப் பெற்றுள்ள அவர் குறித்து அறியாத விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐம்பது ஆண்டுகளைக் கடந்து பணிபுரியும் ஊழியர்கள் 'நல்லி சில்க்ஸ்' நிறுவனத்தில் உண்டு; குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், ஈரான் நாட்டு மன்னர் ஷா, இலங்கை நாட்டின் பண்டாரநாயக போன்ற முக்கிய பிரமுகர்கள் கடைக்கு வந்து சென்றதுண்டு; ராஜ் பவனில் தங்கும் விருந்தினர்கள் நல்லி பட்டுச் சேலைகளைப் பெற்றிருக்கின்றனர்' என்ற வியத்தகு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளிப் பருவத்திலேயே தன்னுடன் படித்த பல மாணவ நண்பர்களுக்கு உதவியிருப்பதை அறியும்போது, வள்ளல் தன்மை இடையில் வருவதல்ல என்பதை உணர முடிகிறது.
ஊரன் அடிகள், ஏ.நடராஜன், பொன்.பரமகுரு, சரஸ்வதி ராமநாதன், அஸ்வினி, பி.என்.விஜயராகவன், ரமா ராகவன், கலைமாமணி விக்கிரமன், எஸ்.பி.மெய்யப்பன், டி.கே.பாலச்சந்திரன், ஆர்.நடராஜன், கலைமாமணி யோகா, ராயா ஆர்.கோவிந்தராஜன், ஆரூர் தாஸ், இரா.முத்துக்குமாரசாமி, நாச்சியப்ப ஞானதேசிகர் ஆதீனகர்த்தர் போன்றோர் எழுதிய கட்டுரைகளில் நல்லி குறித்து ஏராளமான விஷயங்களை அறியலாம். அவர் குறித்த கவிதைகளும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.
'கலைமாமணி', 'பத்மஸ்ரீ'... என்று பல விருதுகளை அவர் பெற்றிருந்தாலும், நூலைப் படித்து முடித்தவுடன் 'வள்ளல்' என்ற பட்டத்தை அளிப்போம் என்பதே உண்மை. அவரைப் பற்றி அதிசயிக்கும் தகவல்களை அறிய நல்லதொரு நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உரத் தட்டுபாடு குறித்து ஆலோசனை: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வந்த இமயமலை கருப்பு கரடி, சிறுத்தை பூனைகள்

பிரதமா் மோடியின் திருச்சி வருகைக்குப்பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பாஜக

தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளா் கொலை
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

